கோவில் நகையில் கை வைத்த சந்திரகலா.. அவமானப்பட்டு நிற்கும் சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில், கான்ஸ்டபிள் பேத்தியை மயில்வாகனம் மற்றும் கார்த்திக் இருவரும் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, அந்த பெண், தாதா ஸ்டேஷனில் நடப்பதை எல்லாம் எங்களிடம் சொல்ல மாட்டார். ஆனால், அவர் பரமேஸ்வரி என்வரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். ஒரு வேளை அவர்களிடம் இந்த விஷயத்தை சொல்லி இருக்கலாம் நீங்க அங்க சென்று பாருங்க என்று சொல்ல, இருவரும் பரமேஸ்வரியை தேடி செல்கின்றனர்.

மறுபக்கம், பரமேஸ்வரி என்பவர் கான்ஸ்டபிளின் போட்டோவை வைத்து என்னை தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டிங்க உங்களால ஒரு குடும்பம் பெரிய குடும்பமே பிரிஞ்சி போச்சுனு அடிக்கடி சொல்லுவீங்க, அவங்ககிட்ட நான் எப்படி நடந்த விஷயத்தை சொல்வது என்றே தெரியல என்று புலம்பி கொண்டிருக்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வரும் ஊர்காரர்கள் திருவிழா நடத்த போவதாகவும் அதற்கான கோவில் நகைகளை உங்கள் வீட்டில் வைத்து கொண்டு செல்வதுதான் வழக்கம் என்று சொல்லி நகையை கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கின்றனர். இதைப்பார்த்த சந்திரகலா, ஒரு திட்டத்தை போட்டு முத்துவேலுவிடம் சொல்கிறாள். இந்த முறை கோவிலில் அக்காவிற்கு முதல் மரியாதை கொடுக்கப்போகிறார்கள், அதற்கான கோவில் நகையை வீட்டில் வைத்து இருக்கிறார்கள்.நான் அந்த நகையை போட்டோ எடுத்து தருகிறேன். இன்று இரவுக்குள் அதே போல போலி நகையை செய்து என்னிடம் கொண்டு வந்து கொடு அதை நான் அந்த பெட்டியில் வைத்து விடுகிறேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு முத்துவேலும் சரியான ஐடியா என்று சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

சந்திரகலாவின் சதி: பின் இரவு அனைவரும் தூக்கி பிறகு பூஜை அறைக்கு செல்லும் சந்திரகலா சாமி பேட்டியில் இருந்த அனைத்து நகைகளையும் போட்டோ எடுத்து முத்துவேலுக்கு அனுப்புகிறாள். அங்கே முத்துவேல், அதே போல போலி நகையை செய்து எடுத்து வந்து கொடுக்க, அதை சந்திரகலா யாருக்கும் தெரியாமல் சாமி பெட்டியில் வைத்துவிடுகிறாள். முத்துவேல், இந்த விஷயத்தை காளியம்மாவை சந்தித்து தை சொல்ல சூப்பர் ஐடியா, இதைவைத்தே, நாம சாமுண்டீஸ்வரியை அழித்து விடலாம் என முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X