கார்த்திக், ரேவதி மீண்டும் சேர்வார்களா? சாமுண்டீஸ்வரி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் உண்மையை சொன்னால், ஆத்திரப்பட்ட சாமுண்டீஸ்வரி, ரேவதியை கார்த்தியிடம் இருந்து பிரித்து இனி மேல் நீ என்கூடத்தான் இருக்க வேண்டும் என சொல்கிறாள். இனி உங்களுக்கும் என்னுடைய குடும்பத்திற்கும், இந்த கோயிலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, எந்த நல்லது கெட்டதிலும் நாங்க கலந்து கொள்ள மாட்டோம் என கோவிலிலேயே தலையில் தண்ணீர் ஊற்றி, இந்த குடும்பத்தை இத்தோடு தலைமுழுகுகிறேன் என்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கும்பாபிஷேகம் நின்று போனதால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு எதற்காக இந்த விஷயத்தை இப்பொழுது சொல்லவேண்டும். சாமுண்டீஸ்வரி பற்றியும் நன்றாக தெரிந்திருந்தும், இந்த நேரத்தில், நீ உண்மையை சொன்னது ரொம்ப தப்பு. உன்னால், கோவில், கும்பாபிஷேகமே நின்னு போச்சு என ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு கார்த்திக்கை திட்டுகின்றனர். அப்போது கௌசல்யா, என்ன நடந்தது என்று தெரியாமல் எதற்கான கார்த்திகை திட்டுறீங்க, இதற்கு எல்லாம் காரணம் காளியம்மா தான், அவர் தான் கும்பாபிஷேகத்தை கெடுப்பதற்கான கோவில் பாம் வைத்து இருக்கிறார். கார்த்திக் உண்மை சொல்லவில்லை என்றால், அந்த குண்டை வெடிக்க வைத்துவிடுவேன் என்று கூறியதால் தான், கார்த்திக் வேறு வழியே இல்லாமல் எல்லாத்தையும் சொன்னார் என்று உண்மையை ஊர் மக்கள் முன் சொல்கிறார்.

கார்த்திகை தீபம்: அதைத்தொடர்ந்து கார்த்திக், காளியம்மாளுக்கு போன் செய்து, நீங்க சொன்னபடி நான் அத்தையிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிட்டேன். கும்பாபிஷேகம் நின்று விட்டது. பாம் எங்கே இருக்கு என்று சொல்லுங்க என கேட்கிறான். அப்போது, காளியம்மா, ரொம்ப சந்தோஷம் கார்த்திக், நான் நினைச்சபடி கும்பாபிஷேகம் நின்றதில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். அந்த 'பாம்', உன் மாமனார் போட்டு இருந்த மாலையில் தான் இருக்கிறது என்று சொல்கிறாள். காளியம்மாள், போனில் பேசியதை கார்த்தி ஸ்பீக்கரில் போட அதை ஊர்மக்கள் அனைவரும் கேட்டு ஆத்திரப்படுகின்றனர்.
கோபத்தில் ஊர்மக்கள்: கும்பாபிஷேகத்தை நிறுத்த காரணம் காளியம்மா, சிவனாண்டி மற்றும் முத்துவேல் தான் என்று அறியும் ஊர் மக்கள் மிகுந்த கோபமடைகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களை பிடித்து இழுத்து வந்து மரத்தில் கட்டிப்போட்டு அடித்து கொளுத்த போக கார்த்திக் நிறுத்துங்க என்று தடுத்து நிறுத்துகிறான், நாமும் இதே மாதிரி நடந்துக்கிட்டா அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு என்று கேள்வி கேட்கிறான்.
கதறி அழும் பாட்டி: இதையடுத்து பரமேஸ்வரி பாட்டி கோவிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் கௌசல்யா என்னாச்சு என்று கேட்க என் பேரனும் உண்மையை சொல்லிட்டான், கும்பாபிஷேகமும் நின்னு போச்சு என்று சொல்லி புலம்புகிறாள். தொடர்ந்து சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்தி இருக்கீங்க என்று ஆவேசப்பட சந்திரகலா ஏற்றி விடுகிறாள். கார்த்திக் மயில்வாகனத்திற்கு போன் செய்து வீட்டிற்கு வருவதாக சொல்ல மயில் அத்தை கோபமாக இருக்காங்க இப்போ வேண்டாம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











