கைது செய்யப்படும் சாமுண்டீஸ்வரி.. கார்த்திக் காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துவேல், நகை பார்த்தால் போலி நகை போல தெரிகிறது என்று சொல்கிறார். இதையடுத்து, நகையை சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி மற்றும் சிவனாண்டி ஆகியோர் மத்தியில் வாக்குவாதம் உருவாகிறது. ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி நகையை பரிசோதனை செய்து பாருங்க என்று சொல்கிறாள். பிறகு ஆச்சாரி ஒருவரை வரவைத்து நகைகளை பரிசோதனை செய்ய அனைத்தும் போலி நகை என்பது தெரிய வருகிறது.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி போலி நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள், உடனே காளியம்மாள் இப்படி சாமி நகையை திருடுவதற்கு பிச்சை எடுக்கலாம் என தகாத வார்த்தையால் பேசுகிறாள். ஊர் மக்களும் உங்கள் மீது நாங்க எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தோம் என்கின்றனர். இதைக்கேட்டு கொண்டு இருந்த கார்த்திக், அத்தை நிச்சயம் இப்படி செய்து இருக்க மாட்டார்கள், அந்த கோவிலை கட்டியதே அத்தை என்பதை மறந்துவிடாதீர்கள் என்று சொல்கிறார். இதையடுத்து ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, கோயில் நகை காணாமல் போனதற்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். போலி நகை எப்படி இந்த பெட்டிக்குள் வந்தது என்று எனக்கு தெரியாது உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று சொல்கிறாள். பின் போலீஸ் வர வைக்கப்பட்டு சாமுண்டீஸ்வரியை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

சிறையில் சாமுண்டீஸ்வரி: கார்த்திக் அத்தை இப்படி எல்லாம் சேர்த்து இருக்க வாய்ப்புள்ள என சந்தேகமடைந்து சாமுண்டீஸ்வரி காப்பாற்றும் வேலையில் இறங்குகிறான். அடுத்ததாக சந்திரகலா சாமுண்டீஸ்வரியை சந்தித்து இதெல்லாம் காரணம் கார்த்திக் தான்.. கார்த்திக் தான் உன்னை ஜெயில்ல தள்ள இப்படி பண்ணி இருக்கான் என்று ஏற்றி விட ராஜராஜன் மாப்ள அப்படி செய்யிற ஆள் கிடையாது என சப்போர்ட் செய்கிறார். அதே போல சாமுண்டீஸ்வரியும் தேவையில்லாமல் பேசாதே சந்திரா,கார்த்தியை எனக்கு பிடிக்காதுதான் ஆனால், இப்படி ஒரு கேவலமான விஷயத்தை அவர் செய்ய மாட்டான் என்கிறாள். மறுபக்கம் கார்த்திக் மயில் வாகனத்திடம் அத்தையை காப்பாத்த நீங்க தான் சகல உதவி பண்ணனும் என்று சொல்லி திட்டம் ஒன்றை சொல்ல அடுத்து மயில்வாகனம் லேடி கெட்டப்பில் வந்து முத்துவேலை தனியாக அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X