என் உசுரே அவன் தான்.. ரேவதியின் காதலை உணர்ந்த கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கும்பாபிஷேகம் நின்றுவிட்டதால், பரமேஸ்வரி பாட்டி கோவிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் கௌசல்யா அவரை சமாதானப்படுத்துகிறார். தொடர்ந்து சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்தி இருக்கீங்க என்று ஆவேசப்பட சந்திரகலா, அக்கா நான் பல முறை உன்னிடம் சொன்னேன் ஆனால், நீ தான் கேட்கவில்லை என்று சொல்லி மேலும், ஏற்றி விடுகிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி, ஆமாம் சந்திரா நான் உன்னை நம்பாமல், அவன் மேல நம்பிக்கை வைச்சி, பிஸ்னஸ், வீடு என்று சொல்ல பொருப்பையும் அவன் கையில் கொடுத்தேன். ஆனால் அவன் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான் என்று ஆத்திரப்படுகிறாள்.
அப்போது, கார்த்திக் மயில்வாகனத்திற்கு போன் செய்து வீட்டிற்கு வருவதாக சொல்ல மயில் அத்தை கோபமாக இருக்காங்க இப்போ வேண்டாம் என்று சொல்கிறான். ஆனால், கார்த்திக் இல்லை நான் வரவில்லை என்றால், ரேவதி ரொம்ப கஷ்டப்படுவாள் அவங்க என்னை என்ன செய்தாலும் பரவில்லை நான் வருகிறேன் என்கிறார். பின் வீட்டிற்குள் வந்த கார்த்திக், நான் சாமுண்டீஸ்வரி அத்தை வீட்டிற்கு போறேன் என்று சொல்ல பாட்டி, அவ பயங்கர கோபத்தில் இருப்பா.. இப்போதைக்கு அங்க போக வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் கார்த்திக் இப்படியே போகாமல் இருந்தால் எப்படி? அவங்களுக்காக இல்லனாலும் ரேவதிக்காக போகணும்ல என்று சொல்லி கிளம்பி வருகிறான்.

கார்த்திகை தீபம்: கார்த்தியை சாமுண்டீஸ்வரி நம்பிக்கை துரோகி என அவமானப்படுத்தி ஆவேசமாக பேசுகிறாள். இனிமே உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறாள். இதனால் ரேவதி நானும் அவருடன் போறேன் என்று கிளம்புகிறாள். இதைப்பார்த்த சாமுண்டீஸ்வரி, ஆவண நம்பி போகாத ரேவதி, அவன் நம்ம குடும்பத்தை பிரிக்க வந்தன், உன்னையும் என்னையும் பிரிக்கிறதுக்காக தான் அவ உன்ன கல்யாணமே செய்து இருக்கிறான் என சொல்கிறாள். இதை கேட்டு ஆத்திரப்படும் ரேவதி, தேவையில்லாமல் அவரைப்பற்றி பேசாதீர்கள் இந்த குடும்பத்திற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எனக்குத் தான் தெரியும்.
என் உசுரே அவன் தான்: கார்த்திக்க போல ஒரு புருஷன் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும், இந்த குடும்பத்தை எப்படியாவது சேர்த்துடலாம்னு அவரு ரொம்ப கஷ்டப்பட்டார். நான் அவரோட சேர்ந்து வாழ்றதான் சரியா வரும். என்னோட உயிரே இந்த மனுஷன் தான். இந்த வீட்ல நான் இருக்க வேண்டிய அவசியம் இல்ல, அவரு என்னை எந்த இடத்துக்குகூட்டிட்டு போனாலும், அந்த இடத்துல அவர் கூட நான் மகிழ்ச்சியாக வாழ்வேன் என சொல்கிறாள் இப்படி ரேவதி சொல்வதைக் கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை கையில் எடுத்த சாமுண்டேஸ்வரி நீ போனா என்னை நானே சுட்டுக்கிட்டு செத்து போய்டுவேன் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











