என்னை கூட்டிட்டுபோ கார்த்தி.. கதறி அழும் ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், கார்த்தியுடன் கிளம்பிய ரேவதியால் அதிர்ச்சியாக சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொள்வேன் என்று மிரட்டுகிறான். இதனால், பதறிபோன கார்த்திக், ரேவதியை சமாதானப்படுத்தி விட்டு, உன் அம்மாவின் கோவத்தை பற்றி உனக்கு நன்றாகவே தெரியும் அப்படி இருக்கும் போது, நீ என்னுடன் வருவது சரியில்லை என்று சொல்கிறான். இதனால், ரேவதி அழுதுக்கொண்டே நிற்கிறாள்.
அதோடு கார்த்தி பயன்படுத்திய துணியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்ட சந்திரகலா, கார்த்தியை சந்தித்து ஜெயித்த கர்வத்தில் பேச இன்னும் ஒரே மாசத்தில் இந்த வீட்டிற்குள் திரும்ப வருவேன் என்று கார்த்திக் சவால் விடுகிறான்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த கார்த்திக் பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்ததை சொல்ல, பாட்டி வருத்தப்பட கார்த்திக், நவீன் மற்றும் துர்கா ஆகியோர் சமாதானம் சொல்கின்றனர். அந்த சாமுண்டீஸ்வரியை இப்படியே விட கூடாது என முடிவெடுக்கும் பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து சத்தம் போடுகிறாள். பிரிந்து இருக்கும் ரெண்டு குடும்பமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், என் பேரன் உன்கிட்ட உண்மையை மறைச்சான். பேத்தி கூட, பேரன் கூட சந்தோஷமா நான் இருக்க வேண்டும் என நினைச்சு என் பேரன் நல்லதுக்காக தானே இப்படி பண்ணான் என்று சத்தம் போடுகிறாள்.
வருத்தப்படும் ரேவதி: இதைக்கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, ஏய் கிழவி எதற்காக இந்த வீட்டுக்கு வந்த, நான் கோவிலேயே எல்லாத்தையும் தலை முழுகிவிட்டேன். இனிமேல் உனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன் பேரன், என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான் என்று சத்தம் போடுகிறாள். இதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி அங்கிருந்து கிளம்பி வருகிறார். மறுபக்கம் ஜெயிலில் இருக்கும் சிவனாண்டி, முத்துவேல் மற்றும் காளியம்மா ஆகியோர் ஜெயிலில் அடுத்து என்ன செய்வது என யோசிக்கின்றனர்.
வீட்டில் கார்த்திகை நினைத்து வருத்தப்படும் ரேவதி, கார்த்திக்கிற்கு போன் செய்து, என்னை அழைத்துப்போ கார்த்திக் நீ இல்லாத இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று கதறி அழுகிறாள். அவளை கார்த்திக் சமாதானப்படுத்துகிறான். பிறகு கார்த்திக் ரேவதியை நினைத்து வருத்தத்தில் இருக்க பரமேஸ்வரி பாட்டி ஆறுதல் சொல்கிறார். பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து கார்த்தியை சாப்பிட வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











