காளியம்மாவை ஜெயிலுக்குள் ஓட விட்ட கார்த்திக்.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் வீட்டில் இல்லாத நேரத்தில் சாமுண்டீஸ்வரியை கொல்வதற்காக காளியம்மாள் ஜெயிலில் இருந்தபடியே ரௌடிகளை அனுப்புகிறாள். அந்த ரௌடிகள் வீட்டிற்கு சென்று கதவை உடைத்துக்கொண்டு இருக்க ஒட்டுமொத்த குடும்பமும் பதறிப்போகிறது. அந்த நேரத்தில் மயில்வாகனம் , கார்த்திக்கிற்கு போன் செய்து விஷயத்தை சொல்லி, கார்த்திக் வேகமாக வந்து ரௌடிகளை அடித்துப்போட்டுவிட்டு அனைவரையும் காப்பாற்றுகிறார்.
மறுபக்கம், கோவிலிலில் குண்டுவைத்தது நாங்கதான், காளியம்மா, சிவனாண்டி முத்துவேல் ஆகியோருக்கு இதில் தொடர்பு இல்லை என்று இரண்டு பேர் சரண் அடைகின்றனர். இதையடுத்து, இன்றைய எபிசோடில், காளியம்மாள், கார்த்திக்கிற்கு போன் செய்து, கார்த்திக் நாங்க வெளியில் வந்துவிட்டோம். இதற்கு மேல் தான் எங்க ஆட்டத்தை நீ பாக்க போற, சாமுண்டீஸ்வரி உன்னை வெளியில் துரத்திய விஷயத்தை கேள்விப்பட்டேன். பாவம் இப்போ நீ ரொம்ப வருத்தத்தில் இருப்ப, இதை பார்ப்பதற்காகத்தான் நான் ஜெயிலில் இருந்து வந்து இருக்கிறேன். எதுக்குடா இந்த காளியம்மாள் கிட்ட பிரச்சனை வெச்சிக்கிட்டோம் என்று தினம் தினமும் நீ கஷ்டப்பட வேண்டும், அதைப்பார்த்து நானும், என் மகனும் சந்தோஷப்படுவோம் என்று சொல்கிறாள்.

கார்த்திகை தீபம்: இவை அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்த கார்த்திக், இதுக்கு மேல் தான் இந்த கார்த்தியோட ஆட்டத்தை நீங்க பாப்பீங்க, எதுக்குடா வெளியில் வந்தோம் என்று, நீங்களே ஜெயிலுக்கு போகப்போறீங்க என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான். இதையடுத்து, கார்த்திக் தனது ஆட்களை வைத்து காளியம்மாள் வீடு மற்றும் காரில் வெடிகுண்டு வைக்கிறான். இது தெரியாமல் மூன்று பேரும் வீட்டில் பேசிக்கொண்டு இருக்க, ஏதோ சத்தம் கேட்கிறது என சிவாண்டி சொல்ல, பின் அது வெடிகுண்டு என தெரியவருகிறது. இதையடுது அனைவரும் வீட்டை விட்டு ஓடிவர வீடு இடித்து தரைமட்டமாகிறது. பின் காரும் வெடித்து சிதறுகிறது.
பயந்து ஓடிய காளியம்மாள்: இதனால் பயந்து போன காளியம்மா, சிவனாண்டி, முத்துவேல் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, எங்கள உயிருக்கு வெளியில் இருந்தால் பெரிய ஆபத்து, நாங்க தான் கோவில் திருவிழாவில் குண்டுவைத்தோம் என்ற உண்மையை ஒத்துக் கொண்டு ஜெயிலுக்குள் சென்று விடுகின்றனர். பிறகு கார்த்திக் அவர்களை சந்தித்து என்ன திரும்பவும் ஜெயிலுக்கு போய்ட்டீங்க போல என்று பதிலடி கொடுக்கிறான். பிறகு காளியம்மா சந்திரகலாவை கூப்பிட்டு ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்கிறாள். இதை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்துக்கு வந்து இனிமே கார்த்திக் வரமாட்டாரு எல்லாத்தையும் என்கிட்ட தான் பேசணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











