ஐ.டி ரெய்டில் சிக்கிய சாமுண்டீஸ்வரி.. கார்த்திக் காப்பாற்றியது எப்படி? கார்த்திகை தீபம்!
சென்னை: ஜெயில் இருந்து வந்த காளியம்மா, சிவனாண்டி, முத்துவேல் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, எங்கள உயிருக்கு வெளியில் இருந்தால் பெரிய ஆபத்து, நாங்க தான் கோவில் திருவிழாவில் குண்டுவைத்தோம் என்ற உண்மையை ஒத்துக் கொண்டு ஜெயிலுக்குள் சென்று விடுகின்றனர். பிறகு கார்த்திக் அவர்களை சந்தித்து என்ன திரும்பவும் ஜெயிலுக்கு போய்ட்டீங்க போல என்று பதிலடி கொடுக்கிறான். பிறகு காளியம்மா சந்திரகலாவை கூப்பிட்டு ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்கிறாள்.
காளியம்மாள் சொன்னது போல ஒரு திட்டத்தை போடும் சந்திரகலா, கணவன் மனைவி ஒருவரை செட் செய்து, அவர்களிடம் மகளுக்கு திருமணம் என்று அழைப்பிதழ் கொடுக்க சொல்கிறாள். அதே நேரம் அவர்களிடம் ஒரு ஸ்வீட் பாக்ஸில் தங்க கட்டியை வைத்து அதை சாமுண்டீஸ்வரியிடம் கொடுக்க சொல்கிறாள். சந்திரகலா சொன்னது போல, இருவரும் வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரியிடம் பத்திரிக்கையுடன் ஸ்வீட் பாக்சை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதையடுத்து, சந்திரகலா, வருமானவரித்துறையினருக்கு போன் செய்து, சாமுண்டீஸ்வரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது. அவர் வருமானத்தை கணக்கு காட்டுவது இல்லை என்று புகார் கொடுக்கிறாள்.

கார்த்திகை தீபம்: சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில், வருமான வரித்துறையினர் அங்கு வந்து சோதனையிடுகின்றனர். ஆனால், வீட்டின் பல இடத்தில் தேடியும் தங்க கட்டி இல்லாததால் அனைவரும் திரும்பி சென்றுவிடுகின்றனர். இதையடுத்து, சந்திரகலா காளியம்மாளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறாள். எப்படி தங்க கட்டி மாயமானது என யோசித்துக்கொண்டு இருக்க அப்போது, கார்த்திக் காளியம்மாவுக்கு போன் செய்து நான் தான் எல்லாத்தையும் மாற்றி வச்சேன்.. என்று சதியை முறியடித்த கதையை சொல்லி ஷாக் கொடுக்கிறான்.
கடுப்பான சந்திரகலா: இதைத்தொடர்ந்து, அடுத்ததாக செங்கல் சூளையில் வேலை செய்யும் ஆட்கள், சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து இனிமேல் கார்த்திக் வர மாட்டாரா என்று கேட்கின்றனர். அதற்கு சாமுண்டீஸ்வரி இனி மேல் அவர் வரமாட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் வருவார் என்று சொல்கிறாள். இதையடுத்து, அங்கு வேலை செய்தவர்கள், கார்த்திக் இருக்கும் வரை எல்லாம் சரியாக நடந்தது, எங்களை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். எங்களை நன்றாக பார்த்துக்கொண்டவருக்கு இப்போது பிரச்சனையில் இருக்கிறார். அவருக்காக நாங்க பேச வந்து இருக்கிறார். மீண்டும் கார்த்திக் வரவேண்டும் என சொல்லி முறையிடுகின்றனர். இதனால் சாமுண்டீஸ்வரி கடுப்பும் கோபமும் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











