சிலை திறப்பு விழாவில் நடந்தது என்ன? பலரின் உயிர் தப்புமா?..கார்த்திகை தீபம்!

சென்னை: நேற்றைய எபிசோடில் நினைவுடன் திறக்கும் இடத்தில் சிவனாண்டியும் அவனது சித்தப்பா முத்துவேலும் வெடி குண்டை காலையில் 10 மணிக்கு அதாவது அமைச்சர் வரும் நேரத்தில் வெடிக்கும் படி ஏற்பாடு செய்து சிலைக்கு பின்னால் வெடி குண்டை வைக்கின்றனர். இந்த விஷயத்தை சிவனாண்டி ஃபோன் செய்து சந்திராவிடம் சொல்கிறான். நாளை காலை 10 மணிக்கு குண்டு வெடிக்கும், அதில் உன் அக்கா மட்டுமில்ல, இன்னும் பல பேர் சாக போகிறார்கள் என சொல்கிறான். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதால் சாமுண்டீஸ்வரி சிலை திறப்பு விழாவுக்கு கிளம்பி கொண்டிருக்க சந்திரகலாவும் உடன் கிளம்புகிறாள். இவர்கள் இருவரும் சிலை திறப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர சிவனாண்டி, சந்திரகலாவை பார்த்துவிட்டு, இவ எதுக்கு இங்கே வந்தா? இவளுக்கு பாம் வச்சி இருக்குனும் சொல்லியும் எதற்காக இங்கே வந்தே என பதட்டம் அடைகிறான். பின் சந்திரகலாவுக்கு சிவனாண்டி ஃபோன் செய்ய அவள் போனை எடுக்காமல் இருக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அடுத்ததாக மத்திய அமைச்சர் சகுந்தலா நினைவிடம் திறக்கும் இடத்திற்கு வர அவரை சாமுண்டீஸ்வரி வரவேற்கிறாள். பிறகு அமைச்சர் சகுந்தலா, அம்மாவிற்காக ஒரு நினைவிடம் கட்டி அதில் தினமும் உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கார்த்திக்கை நான் மனதார பாராட்டுகிறேன் என்கிறாள். இதையடுத்து சாகுந்தலா சிலையை திறக்க போகும் சமயத்தில், சாமுண்டீஸ்வரியை அழைத்து நீங்களும் வாங்க, உங்க மாப்பிள்ளையும் நீங்களும் இந்த சிலையை திறந்து வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாரு என்று சொல்கிறார்.

சிவனாண்டிக்கு பல்ப்: அமைச்சரே அழைத்ததால்,சாமுண்டீஸ்வரியால் எதுவுமே சொல்ல முடியாமல் போய்விடுகிறது. பிறகு ரிமோட் பட்டனை அழுத்தி சிலையை திறந்து வைக்கின்றனர். பட்டனை அழுத்த பாம் வெடிக்கும் என சிவனாண்டியும், முத்துவேலும் எதிர்பார்த்து இருந்த நிலையில், மலர்கள் தூவியதால் இருவரும் குழப்பம் அடைகின்றனர். பிறகு அங்கு வந்த கார்த்திக், என்ன பாம் வெடிக்கும் என பாத்தீங்களா என பல்பு கொடுக்கிறான். மேலும் அமைச்சர் அங்கிருந்து கிளம்ப அவரை அடுத்த நாள் வீட்டில் நடக்க உள்ள சுமங்கலி பூஜைக்கு வர சொல்கின்றனர். அடுத்த நாள் அமைச்சரும் சொன்னபடியே சுமங்கலி பூஜைக்கு வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X