ரேவதியின் தாலியில் குங்குமம் வைத்த கார்த்திக்..மண்ணை கவ்விய சந்திரகலா.. கார்த்திகை தீபம்!
சென்னை: சிலை திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர், சாமுண்டீஸ்வரியை சிலையை திறக்க அழைத்ததால் எதுவும் சொல்ல முடியாமல் போய்விடுகிறது. பிறகு இருவரும் சேர்ந்து ரிமோட் பட்டனை அழுத்தி சிலையை திறந்து வைக்கின்றனர். பட்டனை அழுத்த பாம் வெடிக்கும் என சிவனாண்டியும், முத்துவேலும் எதிர்பார்த்து இருந்த நிலையில், மலர்கள் தூவியதால் இருவரும் குழப்பம் அடைகின்றனர். பிறகு அங்கு வந்த கார்த்திக், என்ன பாம் வெடிக்கும் என பாத்தீங்களா என பல்பு கொடுக்கிறான். மேலும் அமைச்சர் அங்கிருந்து கிளம்ப அவரை அடுத்த நாள் வீட்டில் சாப்பிட ராஜராஜன் அழைக்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மறுநாள் காலை பெண் அமைச்சர் வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரியிடம் நீங்க இந்த ஊர் மக்களுக்கு பல நல்ல விஷயத்தை செய்து இருக்கீங்க, இதேபோல பல நல்ல விஷயத்தை செய்து அரசியலில் நீங்க பெரிய இடத்திற்கு வர வேண்டும், பெண்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்க அப்போது, அமைச்சர் ரங்கநாயகிக்கு போன் வருகிறது. அதில் பேசும் ஜோசியர், மேடம் இன்னைக்கு வரலாட்சுமி நோம்பு, அதை நினைவு படுத்தத்தான் போன் செய்தேன் என்று சொல்கிறார். உடனே அமைச்சர், அப்படியா நான் மறந்துவிட்டேன். அப்போது, நான் தமிழ் நாட்டில் இருக்கிறேன் அடுத்த வருடம் பாத்துக்கலாம் என போனை வைக்கிறார்.

கார்த்திகை தீபம்: உடனே, கார்த்திக் என்ன என்று கேட்க, வரலட்சுமி பூஜையை நான் வருடா வருடம் செய்வேன். அதைத்தான் ஜோசியர் நினைவுபடுத்தினார். நான் ஊர்ல இல்ல, இங்கே எப்படி சுமங்கலி பூஜை செய்வது என்று யோசிக்க, உடனே ரேவதி நீங்க வேணும்னா எங்க வீட்டில் பூஜை பண்ணிக்கோங்க என்று சொல்கிறாள். இதை கேட்ட சந்திரகலா, கார்த்தியும், ரேவதியும் அவங்க நினைக்கிறதெல்லாம் அமைச்சரை வச்சி நிறைவேற்றிக்கிறாங்க, அதனால் நீ இதற்கெல்லாம் சம்மதம் சொல்லாத என்று சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள். ஆனால் அமைச்சரே நேராக சாமுண்டீஸ்வரியிடம் இதுகுறித்து கேட்க மறுக்க முடியாமல் அவள் சம்மதம் சொல்கிறாள். அதன் பிறகு வீட்டில் சுமங்கலி பூஜைக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது.
ரேவதியின் மாஸ்டர் பிளான்: தொடர்ந்து, அமைச்சர் வீட்டில் பாட்டு பாடி பூஜை செய்து சுமங்கலி பூஜை நல்லபடியாக நடந்து முடிகிறது. மேலும், அமைச்சர் சுமங்கலி பூஜை எதற்காக செய்கிறோம் என்று கதையை சொல்கிறார். அதோடு மட்டுமில்லாமல் கார்த்திக், ரேவதி இருவரையும் ஆசிர்வாதம் செய்கிறார். பின் சாமுண்டீஸ்வரிக்கு கார்த்திக் ரேவதி இருவரும் சேர்ந்து புடவை கொடுக்க அதை வேறு வழியே இல்லாமல் வாங்கிக்கொள்கிறாள். இதையெல்லாம் பார்த்து சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். அப்போது மயில்வாகனம் என்ன சின்ன அத்தை அதிர்ச்சியா இருக்கா, இப்போதாவது என சகல கார்த்திக்கை பற்றி தெரிஞ்சிக்கோங்க இனி மேல் அவன் வழியில் வராதீங்க என கிண்டல் அடிக்கிறான்.
மறுபக்கம், ஜாக் மொட்டை மாடியில் உடைந்த செங்கல் கற்களை போட்டு வைத்து அதை உடைத்து போல் நிற்கிறான்.இதைப்பார்த்து ரேவதிக்கு என் மீது காதல் வரும் என இப்படி ஒரு திட்டத்தை போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











