பாசத்தை காட்டிய கார்த்திக்.. மீண்டும் சவால் விடும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் !
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலா, சவாலில் கார்த்திக் ஜெயித்துவிட்டான், நினைவிடத்தை பெருக்க சொல்லுவான் அதற்குள் நாம இந்தவீட்டை விட்டு போய் கொஞ்ச நாள் வெளியில் இருந்துவிட்டு வரலாம் என முடிவு எடுத்துவிட்டு வெளியில் வர வெளியில் கார்த்திக், மயில்வானம் இருவரும் நிற்கின்றனர். உடனே மயில்வாகனம் என்ன அத்தை வீட்டை விட்டு ஓடிவிடலாம் என பிளான் போடுறீங்களா என்று கேட்க, உடனே கார்த்திக் அதெல்லாம் இல்ல, நான் ஏன் வீட்டை விட்டு ஓடவேண்டும் என சொல்கிறாள். உடனே கார்த்திக் , அத்தை இப்போ ஒன்னும் கெட்டுப்போகவில்லை. நீங்க இந்த வீட்டை விட்டு போய் உங்க புருஷன் கூட வாழுங்க என்று சொல்ல ஆத்திரப்படும் சந்திரகலா, உன்னை இந்த வீட்டைவிட்டு துரத்தாம நான் வெளியில் போக மாட்டேன் என்கிறாள்.
இதையடுத்து, நினைவிடத்தில் சந்திரகலா பெருக்கி சுத்தம் செய்கிறாள். இதை மறைந்து இருக்கும் சிவனாண்டியும் முத்துவேலும் பார்க்கின்றனர். பாத்தீங்களா சித்தப்பா, கார்த்திக் என் பொண்டாட்டிய எப்படி எல்லாம் பழிவாங்குகிறானு, இவனை இப்படியே விடக்கூடாது என்று சொல்கிறான். பிறகு, வீட்டிற்கு சந்திரகலா வர, ரேணுகா அபிராமி நினைவிடத்தில் பெருக்கி சுத்தம் செய்த வீடியோவை போட்டு காட்டி கிண்டலடித்து சிரிக்க சந்திரகலா கடுப்பாகிறாள். இதற்கு காரணமான கார்த்தியை சும்மா விடக்கூடாது என முடிவு எடுக்கிறாள். இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சந்திரகலா அபிராமி நினைவிடத்தில் பெருக்கி சுத்தம் செய்துவிட்டு வந்து டயர்டா இருக்கிறாள். அவளை பார்த்த கார்த்திக், என்ன அத்தை டயர்டா இருக்கீங்க என்று கேட்டு கலாய்க்கிறான். இதுக்குத்தான் என்கிட்ட சவால் விடக்கூடாதுன்னு சொல்றது என்று சொல்ல சந்திரகலா கடுப்பாகிறாள். அடுத்து அங்கு வந்த ஜாக் என்ன ஆச்சு? என்ன பிரச்சனை கேட்டு பல்பு வாங்குகிறான்.
ஆத்திரத்தில் சந்திரகலா: தொடர்ந்து கார்த்திக் ரேவதியிடம் நான் ஆசைப்பட்ட மாதிரி அம்மாவோட நினைவிடம் திறந்தாச்சு, சுமங்கலி பூஜை நடத்தி ஆச்சு என சொல்லிக்கொண்டு இருக்கிறான். அப்போது ரேவதி, எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும் தான் இருக்கு, உங்க அம்மாவை அத்தை என்று நான் கூப்பிடவே முடியாமல் போய்விட்டது என்று வருத்தப்படுகிறாள். இதே போல உங்க கூட கடைசி வரைக்கும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என கார்த்திக்கை கட்டி அணைத்துக்கொள்ள கார்த்தியும் ரேவதியை கட்டிக் கொள்கிறான்.
பிறகு, சந்திரகலா தனிமையில் எதையோ யோசித்துக்கொண்டு இருக்க அங்கு வரும் கார்த்திக், என்ன அத்தை என்கிட்ட தோற்றதை நினைச்சிக்கிட்டு இருக்கீங்களா? அதை விடுங்க அத்தை,நான் என்னைக்குமே உங்களை எதிரியா பார்த்தது கிடையாது.. உங்களை என் அத்தையா தான் பாக்குறேன் என்று சொல்ல சந்திரகலா நான் உன்னை எதிரியா தான் பார்க்கிறேன்.. கூடிய சீக்கிரம் உன்னை இந்த வீட்டை விட்டு விரட்டுவேன் என சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











