ரேவதிக்கு லவ் ப்ரபோஸ் செய்யும் கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலா தனிமையில் எதையோ யோசித்துக்கொண்டு இருக்க அங்கு வரும் கார்த்திக், என்ன அத்தை என்கிட்ட தோற்றதை நினைச்சிக்கிட்டு இருக்கீங்களா? அதை விடுங்க அத்தை, நான் என்னைக்குமே உங்களை எதிரியாக பார்த்தது கிடையாது.. உங்களை என் அத்தையாகத்தான் பாக்குறேன் என்று சொல்ல சந்திரகலா நான் உன்னை எதிரியா தான் பார்க்கிறேன்.. நீ என் எதிரி என்பது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. கூடிய சீக்கிரம் உன்னையும் ரேவதியையும் பிரிந்து இந்த வீட்டை விட்டு விரட்டுவேன் என்கிறாள். அப்போது ரேவதி, அது இந்த ஜென்மத்தில் நடக்காது சித்தி, நான் விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டது என் அம்மாவிற்காக தான், என்னையும் கார்த்திக்கையும் பிரிக்கவே முடியாது என்கிறாள். உடனே சந்திரகலா என்னடி உன் புருஷன் மாதிரி நீயும் என்கிட்ட சவால் விடுறியா, சவால்டி உன்னையும் உன் புருஷனையும் பிரிந்து காட்டுகிறேன் என்கிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் கார்த்தி இளையராஜாவுக்கு ஃபோன் செய்து, நான் சொன்னபடி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டாயா? என கேட்கிறார். உடனே இளையராஜா அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். எல்லாம் பக்காவாக இருக்கிறது என சொல்கிறார். எல்லாம் செய்துவிட்டேன் ஆனால், யாருக்கு என்ன பக்ஷன் என்று சொல்லவில்லையே என்று கேட்க, கார்த்தி, டேய் ரேவதிக்கு தான்டா, நாளைக்கு வேலன்டைன்ஸ் டே, அதனால் ரேவதிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என இருக்கிறேன் அதற்காகத்தான் இந்த ஏற்பாடு என சொல்கிறார். உடனே இளையராஜா, ஓ கதை அப்படி போகுதா, நல்ல விஷயம் சிறப்பாக செய்துவிடுகிறேன் என்கிறார்.
கார்த்திக் கொடுக்கும் சப்ரைஸ்: இளையராஜாவிடம் பேசிவிட்டு கார்த்திக் உள்ளே வர, அப்போது ரேவதி யாரிடம் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என கேட்கிறார். இளையராஜா கூடத்தான் பேசிக்கொண்டு இருந்தேன். நாளைக்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். அதனால் காலையில் சீக்கிரமாக ரெடியாகி விடு என சொல்ல ரேவதி எங்கே போகிறோம் என கேட்கிறாள். அதை காலையில் தான் சொல்வேன் சஸ்பென்ஸ் என்று சொல்ல, ரேவதி தூங்காமல் விழித்துக் கொண்டு எப்பொழுது விடியும் என எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறாள்.
ஐ லவ் யூ ரேவதி: மறுநாள் காலை ரேவதி, கார்த்திக் இருவரும் காரில் வெளியில் கிளம்ப அப்போது ரேவதி, அப்போதாவது சொல்லுங்க எங்கே போகிறோம் என கேட்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்று விடுகிறோம். அதை நான் இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் இருக்காது, நீயே நேரில் பார்த்து தெரிந்து கொள் என சொல்கிறார். இதையடுத்து, இருவரும் ஓட்டல் அறைக்குள் வர, இளையராஜா அறைக்குள் இருந்து லைட்டுகளை போட, அறை முழுக்க வண்ண வண்ண லைட்டுகளால் ஜொலிக்கிறது. மேலும் இதய வடி பலூனில் ரேவதி ஐ லவ் யூ என எழுதப்பட்டு இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடையும் ரேவதி கார்த்திக்கை கட்டி அணைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











