காதலை வெளிப்படுத்தி கார்த்திக் கொடுத்த முத்தம்.. மகிழ்ச்சியில் ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் காரில் வெளியில் கிளம்ப அப்போது ரேவதி, அப்போதாவது சொல்லுங்க எங்கே போகிறோம் என கேட்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்று விடுகிறோம். அதை நான் இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் இருக்காது, நீயே நேரில் பார்த்து தெரிந்து கொள் என சொல்கிறார். இதையடுத்து, இருவரும் ஓட்டலுக்கு அழைத்து வருகிறார்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், கார்த்திக் ரேவதியை ஒரு ஓட்டலுக்கு அழைத்து வந்து, புது சுடிதாரை தருகிறான். இதை நீ போட்டுக்கொண்டு வர பிறகு நான் என்ன ஸ்பெஷல் என்று சொல்கிறேன் என்கிறாள். இதையடுத்து, கார்த்திக் ரேவதியின் கண்ணை மூடிக்கொண்டு வர, அப்போது இளையராஜா அறைக்குள் இருந்து லைட்டுகளை போட, அறை முழுக்க வண்ண வண்ண லைட்டுகளால் ஜொலிக்கிறது. மேலும் இதய வடி பலூனில் ரேவதி ஐ லவ் யூ என எழுதப்பட்டு இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடையும் ரேவதி கார்த்திக்கை கட்டி அணைக்கிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் இன்னொரு சர்ப்ரைசும் இருக்கு என்று சொல்ல, இன்னோரு சர்ப்ரைசா அதாவது என்ன என்று சொல்லு என அதை சொல்ல மாட்டேன் செய்து காட்டுகிறேன் என்று அவளுக்கு மோதிரம் அணிவித்து தனது காதலை வெளிப்படுத்துகிறான். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரேவதி, காதலர் தினத்திற்கு நான் உன்க்கு கிஃப் கொடுத்து அசத்தலாம் என்று பார்த்தால், எனக்கு முன்பாக நீ முந்திக்கொண்ட என்று சொல்லி, இப்போதைக்கு இதுதான் என்னுடைய கிஃப்ட் என கார்த்திக் கன்னடத்தில் முத்தம் கொடுக்கிறாள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். பிறகு இருவரும் ரெஸ்டாரன்ட் சென்று அன்பை பரிமாறிக் கொண்டு சாப்பிடுகின்றனர்.
வருத்தத்தில் ஜாக்: கார்த்திக் ரேவதி என இருவரும் சிறப்பாக காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்க, வீட்டில் ஜாக், சந்திரகலாவிடம் இன்னைக்கு நான் ரேவதியை அசத்தப்போகிறேன். அவள் என் காதலை பார்த்து வியந்து போக போகிறாள் என்று சொல்ல, கடுப்பாகும் சந்திரகலா, டேய், நீ இந்த மாதிரி முட்டாளா இருந்தா, ரேவதியை 6 மாதத்தில் இல்ல 6 வருஷம் ஆனாலும் மனசை மாத்த முடியாது. காலையிலேயே அவ புருஷன் கூட வெளியில் போட்டா என்று சொல்கிறாள். இதைக்கேட்டு வருத்தப்படும் ஜாக், காதலர் தினத்தை கொண்டாட முடியாமல் தவிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











