தண்டசோறுடா நீ.. மயில்வாகனத்தை அவமானப்படுத்திய சந்திரகலா.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் ரேவதி என இருவரும் சிறப்பாக காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்க, வீட்டில் ஜாக், சந்திரகலாவிடம் இன்னைக்கு நான் ரேவதியை அசத்தப்போகிறேன். அவள் என் காதலை பார்த்து வியந்து போக போகிறாள் என்று சொல்ல, கடுப்பாகும் சந்திரகலா, டேய், நீ இந்த மாதிரி முட்டாளா இருந்தா, ரேவதியை 6 மாதத்தில் இல்ல 6 வருஷம் ஆனாலும் மனசை மாத்த முடியாது. காலையிலேயே அவ புருஷன் கூட வெளியில் போட்டா என்று சொல்கிறாள். இதைக்கேட்டு வருத்தப்படும் ஜாக், காதலர் தினத்தை கொண்டாட முடியாமல் தவிக்கிறான். இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இன்றைய எபிசோடில், மயில்வாகனம் ரோகிணிக்கு ரோஸ் கொண்டு வந்து கொடுத்து காதலை சொல்கிறார். இதைப்பார்த்த சாமுண்டீஸ்வரி, என்ன மாப்ள எப்பவும் இல்லாம புதுசா என கேள்வி கேட்க கார்த்திக் சகல தான் இன்னிக்கு காதலர் தினம், மனைவிக்கு பூ கொடுத்து அசத்துங்க என ஐடியா கொடுத்ததாக சொல்கிறான். இதையடுத்து, ரோகிணி, மயில்வாகனம் கொடுத்த பூவை வாங்கிக் கொண்டு சந்தோஷப்படுகிறாள். அதன் பிறகு ராஜராஜன் சாமுண்டீஸ்வரிக்கு ரோஸ் கொடுக்க உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்லையா, இந்த வயசில் காதலர் தினம் கேட்குதா என திட்டி விட்டு கிளம்பி செல்கிறாள்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் அக்கா நீ வீட்டில் இல்லாத நேரத்தில் கார்த்திக் ரேவதியை வெளியே அழைத்துச் சென்றுவிட்டான். இப்படியே போனால், இரண்டு பேருக்கும் விவகாரத்து நடக்கவே நடக்காது எனஏற்றி விடுகிறாள். அந்த நேரம் பார்த்து கார்த்திக், ரேவதி வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி, ரேவதியிடம் எங்க போயிட்டுவர ரேவதி என்று கேட்டு சத்தம் போடுகிறாள். அப்போது கார்த்திக், நான் என் பொண்டாட்டிய வெளிய கூட்டிட்டு போய்ட்டு வந்தேன் என பதிலடி கொடுக்கிறான்.
அவமானத்தில் தலைகுனிந்த மயில்வாகனம்: பிறகு ரூமுக்கு வந்த ரேவதி ஹோட்டலில் நடந்த விஷயங்களை நினைத்து சந்தோஷப்படுகிறாள். மயில்வாகனம் சந்திரகலாவை சந்தித்து என்ன சின்ன மாமியாரை நினைவிடத்த பெருக்க போலாமா என்று கலாய்க்கிறான். அதன் பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார சந்திரகலா மயில்வாகனத்தை வம்பு இழுத்து தண்டசோறு என திட்டி காயப்படுத்துகிறாள். இதனால் மயில்வாகனம் மனம் உடைந்து சாப்பிடாமல் எழுந்து செல்ல சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











