காணாமல் போகும் மயில்வாகனம்.. கார்த்தியின் திட்டம் என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றை எபிசோடில், எல்லோரும் சாப்பிட உட்கார சந்திரகலா மட்டும் சாப்பிடமாட்டேன் என சொல்கிறாள். இதனால், மயில்வாகனம் சந்திராவை கிண்டலடித்து பேசுகிறான். இதனால், ஆத்திரப்படும் சந்திரகலா, டேய் மயில்வாகனம், தண்டசோறு நீ எல்லாம் என்ன கிண்டல் பண்றியா, இதுநாள் வரைக்கும் உன் பொண்டாடிக்கு ஒரு வேலை சாப்பாடு போட்டு இருப்பியா, அக்கா வீட்டிலேயே இருந்துக்கிட்டு அக்காவிற்கே துரோகம் பண்ணிக்கிட்டு இருக்க, அந்த டிரைவர் ராஜா கூட சேர்ந்துகிட்டு, நீ அக்காவிற்கு எதிராக இருக்க, இந்த மாதிரி சோறு சாப்பிடுவதற்கு நீ சாகலா என்று சொல்ல மயில்வாகனம் மனம் உடைந்து சாப்பிடாமலே எழுந்து செல்ல சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை திட்டுகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், மயில்வாகனம் மனம் நொந்து போய் இருக்க, அப்போது ரோகினி சிந்தி எப்படி எல்லாம் பேசறாங்க பாரு அவங்க அவங்க அப்படித்தான், நீ கார்த்திக்கிற்கு சப்போர்ட் செய்வதால் இப்படி பேசுகிறார்கள், நீ இதைப்பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க என சொகிறார். உடனே மயில்வாகனம், அவங்க சொல்வதும் சரிதானே, நான் உனக்காக எதுவுமே செய்தது இல்லை என எமோஷனலாக பேசி வருத்தப்படுகிறான். அப்போது ரோகினி, ஏங்க எங்களை இப்படி நான் வருத்தப்பட்டு பார்த்ததே இல்லை தயவு செய்து கஷ்டப்படாதீங்க எஎன சொல்கிறாள். சரி ரோகினி நீ தூங்கு என அவளை சமாதானப்படுத்தி மயில்வாகனம் தூங்க வைக்கிறான்.

மனவேதனையில் மயில்: பின் இனிமே என்னால இந்த வீட்ல சும்மா இருக்க முடியாது, நானும் ஏதாவது செய்ய வேண்டும் என மயில்வாகனம் யோசித்துக்கொண்டு இருக்க, அந்த பக்கமாக வந்த சாமுண்டீஸ்வரி, என் தங்கச்சி பேசினதுக்காக உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், அவ அந்த டிரைவர் மேல இருக்குற கோவத்தில் இப்படி பேசிவிட்டால் என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார். உடனே மமயில்வாகனம் அத்தை என்கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்காதீங்க விடுங்க பாத்துக்கலாம் என்று சொல்கிறான்.

மயில்வாகனம் எங்கே போனார்: கார்த்திக் வீட்டுக்கு வந்ததும், ரேவதி, சித்தி இன்னைக்கு மயில்வாகனம் மாமாவை ரொம்ப அசிங்கப்படுத்திவிட்டாங்க, பாவம் அவர் எதுவுமே பேசாமல் சாப்பிடாமல் கூட எழுந்து போய்விட்டார், நீங்க கொஞ்சம் அவரிடம் பேசிவிட்டு வாங்க, அவர் உங்க மேல ரொம்ப மரியாதை வைத்து இருக்கிறார் என சொல்கிறாள். உடனே கார்த்திக் இந்த விஷயத்தை என்கிட்ட விட்டு விடு இத வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என சொல்கிறார். அடுத்த நாள் மயில்வாகனம் வீட்டில் இருந்து காணாமல் போக அனைவரும் பதற்றமாகி அவரை தேட தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X