ரோகினி கர்ப்பம் குறித்து சாமுண்டீஸ்வரி எடுக்கும் முடிவு என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: நேற்றைய எபிசோடில் ரேவதி,ரோகினி இருவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அவர்களை பின்தொடர்ந்து செல்லும் சந்திரகலா மறைந்து இருந்து அவர்கள் பேசுவதை கேட்கிறாள். அப்போது, ரோகினி மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு, நேத்து சித்தி அவரை பற்றி பேசியதை நினைத்து அவர் ரொம்ப வருத்தப்பட்டார் என்று சொல்லி வருத்தப்படுகிறாள். அப்போது, ரேவதி, சித்தி பேசியது ரொம்ப தவறு தான். அதுக்காக நீ வருத்தப்படக்கூடாது என் வயிற்றில் வளரும் குழந்தைக்காவது நீ, நல்லா ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என சொல்கிறாள் இதைக்கேட்ட சந்திரகலா அடிப்பாவி இப்படி ஒரு விஷயத்தை மறைச்சிட்டீங்களா என்று சாமுண்டீஸ்வரிக்கு சொல்கிறாள்.

இதைக்கேட்ட சாமுண்டீஸ்வரி, உனக்கு வேற வேலையே இல்லையா எப்போதாவது யாரையாவது பற்றி குறை சொல்வது தான் உன் வேலையா என சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை சத்தம் போடுகிறாள் அப்போது முதலில் நீ மருத்துவமனைக்கு வா அப்போது தான் உனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று சந்திரகலா சாமுண்டீஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறாள். அங்கு, நர்சிடம் ரோகினி பற்றி கேட்க, அந்த நர்ஸ் அவர் கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை ஆரோக்கியமா இருக்கு என்று சொல்கிறாள். இதைக்கேட்டு சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ரோகினி மற்றும் ரேவதி ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி எங்க போயிட்டு வரீங்க என கேட்க பிரெண்டு வீட்டுக்கு போய்விட்டு வருவதாக சொல்கிறாள். ஆனால், சாமுண்டீஸ்வரி பொய் சொல்லாதீங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சு.. இவ்வளவு நாளா நீ உன்னோட கர்ப்பத்தை என்கிட்ட மறைச்சிருக்க என்று கோபப்பட ரோகினி இல்லம்மா ரொம்ப நாள் கழிச்சு கர்ப்பமாகி இருக்கிறதால பொறுமையா சொல்லலாம்னு இருந்தேன் என சொல்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்பட்டு கத்துகிறாள். அப்போது, மயில்வாகனம், குறுக்கிட்டு எங்க குழந்தையை பொத்துக்கொள்வது எங்க விருப்பம். எத்தனை வருஷமா எங்களுக்கு குழந்தை இல்லை என வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தோம். ஆனால், இப்போது ஒரு நல்ல விஷயம் எங்க வாழ்க்கையில் நடந்து இருக்கு, அந்த குழந்தையை பொத்துக்கக்கூடாது என்று யாருக்கும் உரிமை இல்லை என சொல்கிறார்.

அதிர்ச்சியில் சாமுண்டீஸ்வரி: இதையடுத்து, சாமுண்டீஸ்வரி மீண்டும், ஜோசியரை வரவைத்து மீண்டும் கேட்கலாம் என்று முடிவு செய்கிறாள். இதையடுத்து, ஜோசியரை வரவைத்து கேட்டு விடலாம் என்று சொல்லி அழைக்க வீட்டுக்கு வரும் ஜோசியரின் குழந்தையை கடத்தி வைத்து சிவனாண்டி நான் சொல்ற மாதிரி சொல்லணும் என மிரட்டி ஜோசியரை பொய் சொல்ல வைக்கிறான். ஜோசியர் சொன்னதைக் கேட்டு சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X