ரோகினியின் கரு கலைய வேண்டும்.. அக்கா குடும்பத்திற்கு சதி செய்யும் சந்திரகலா.. கார்த்திகை தீபம்!

சென்னை: நேற்றைய கார்த்திகை தீபம் எபிசோடில், சாமுண்டீஸ்வரி மீண்டும், ஜோசியரை வரவைத்து ரோகினியின் ஜாதகத்தை கேட்கலாம் என்று முடிவு செய்கின்றனர். இதையடுத்து, ராஜராஜன், தனக்கு தெரிந்து
ஜோசியரை வீட்டிற்கு வரும் படி, அழைக்கிறார். வீட்டுக்கு வரும் ஜோசியர் ரோகினியின் ஜாதகத்தை பார்த்துவிட்டு ரோகினிக்கு குழந்தை பிறந்தால், சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார். ஜோசியரின் குழந்தை மற்றும் மனைவியை கட்டிப்போட்டு, கொலை செய்துவிடுவோம் என பயத்தை காட்டி, சிவனாண்டி ஜோசியரை பொய் சொல்ல வைக்கிறான் என்பது தெரியவருகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிகோடில், ரோகினி, சாமுண்டீஸ்வரியிடம் அம்மா, என் குழந்தையால் நிச்சயம் உனக்கு எந்த பாதிப்பும் வராதுமா என காலில் விழுந்து கதறி அழுகிறாள். இதனால்,பதறிப்போன சாமுண்டீஸ்வரி, ரொம்ப நாள் குழந்தை இல்லாமல் இப்போது நீ உண்டாகி இருக்க, இந்த குழந்தையால் எனக்கு எதுவும் ஆகாது என நீயும் மாப்பிள்ளையும் நம்புறீங்க, இது உங்க குழந்தை அந்த குழந்தையை பற்றி நீங்க தான் முடிவு செய்ய வேண்டும் என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். இதைப்பார்த்து, ஆத்திரப்படம் சந்திரகலா, என்ன இவ, குழந்தையை கலைக்க சொல்லாமல் இப்படி பேசிவிட்டு போறா, இவளை இப்படியே விடக்கூடாது என மனதிற்குள் திட்டம் போடுகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மறுபக்கம், ஜோசியர் மீது சந்தேகப்படும் கார்த்திக், அவரின் வீட்டுக்கு சென்று, நீங்க ரோகினிக்கு சொன்ன விஷயம் எல்லாம் உண்மையா, இல்லை வேறு யாராவது அப்படி சொல்ல சொன்னார்களா என்று கேட்கிறார். உடனே ஜோசியர், நான் ஏன் அப்படி பொய் சொல்ல போறேன் என சொல்கிறார். இதையடுத்து, அங்கிருந்து கிளம்புவது போல செல்லும் கார்த்திக் மறைந்து இருந்து வீட்டில் பேசுவதை கேட்கிறார். அப்போது, ஜோசியர் தன் மனைவியிடம் நான் பாவம் செய்துவிட்டேன், ஒரு பெண்ணோட குழந்தையை அழிக்க சொல்லிவிட்டேன் என புலம்பிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரம் கார்த்தி மீண்டும் வீட்டிற்குள் வந்து என்ட்ரி கொடுக்கிறார். மீண்டும் கார்த்திகை பார்த்த ஜோசியர், என் மனைவியும் என் மகளை ஒருவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அதனால் தான் இப்படி செய்துவிட்டேன் என சொல்கிறார். உடனே கார்த்திக், சிவனாண்டியின் போட்டோவை காட்ட ஆமாம், இவன் தான் என சொல்ல, அதன் பிறகு தான் இது எல்லாம் சந்திரகலாவின் வேலை என்பது தெரியவருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X