விபத்தில் சிக்கிய சாமுண்டீஸ்வரி.. கருவை கலைக்க முடிவு எடுக்கும் ரோகிணி - கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக், மயில்வாகனத்திற்கு லோன் வாங்கி கொடுக்கிறார். லோன் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் மயில்வாகனம் வீட்டுக்கு வந்து ரோகிணியிடம் சொல்ல அவள் சந்தோஷப்படுகிறாள். மேலும் ராஜ ராஜன், நான் செய்ய வேண்டியதை செல்லாம் என் சின்ன மருமகன் செய்கிறார் உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதே நேரம், சந்திரகலா, சிவனாண்டியிடம் சொல்லி ஒரு திட்டத்தை போட்டு விபத்தை ஏற்படுத்த பிளான் போடுகிறாள்.
சந்திரகலா, சாமுண்டீஸ்வரி இருவரும் காரில் வந்து கொண்டு இருக்கும் போது, சிவனாண்டி தகவலை கொடுக்க, அவன் வேறு ஒரு காரை ஏற்பாடு செய்து, சாமுண்டீஸ்வரி கார் மீது மோத சாமுண்டீஸ்வரி தலையில் காயம் ஏற்படுகிறது. இதையடுத்து என்ன இன்று நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: சிவனாண்டியின் திட்டத்தின் படி, விபத்தில் சிக்கி தலையில் கட்டுடன் வீட்டுக்கு வர அனைவரும் சாமுண்டீஸ்வரியை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பதறிப்போய் என்ன ஆச்சு என கேட்க, சந்திரகலா, எல்லாத்தும் நீ தான்டி காரணம் உன் வயிற்றில் இருக்கும் குழந்தையால் தான் அக்காவிற்கு இப்படி ஆகிவிட்டது. சாமியார் சொன்ன மாதிரியே நடந்துடுச்சு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த குழந்தை தான் என ரோகிணியின் கர்ப்பம் குறித்து பேசுகிறாள்.
கருவை கலைக்க முடிவு செய்த ரோகிணி: இதனால் ரோகிணி தனது அம்மாவை காப்பாற்றும் எதற்காக குழந்தையை கலைக்க முடிவு எடுக்கிறாள். யாருக்கும் தெரியாமல் ஹாஸ்பிடலுக்கு சென்று குழந்தையை கலைக்க வேண்டும் என்று சொல்ல டாக்டர் அந்த காலத்தை எல்லாம் தாண்டி விட்டது, இதுக்கு மேல் கருவை கலைத்தால் உன் உயிருக்கு ஆபத்து என்று சொல்ல, ரோகிணி இந்த குழந்தையால் என் அம்மாவிற்கு எதுவும் ஆகக்கூடாது, என் அம்மாவின் உயிர்தான் முக்கியம் என டாக்டரின் காலில் விழுந்து அழுகிறாள். இதனால் டாக்டர், நீ குழந்தை வேண்டாம் என்கிற முடிவில் உறுதியாக இருக்கியா என்று கேட்க, ரோகிணி உறுதியாக இருக்கிறேன் என்று சொல்கிறாள். இதையடுத்து, டாக்டர் நாளைக்கு வர சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கிறார்.
நடக்கப்போவது என்ன: அடுத்த நாள் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் விபத்து நடந்து இடத்துக்குச் சென்று பார்க்க இது சிவனாண்டியின் திட்டம் தான் என கார்த்திக் கண்டு பிடிக்கிறான். ஜோசியரை அழைத்து வந்து உண்மையை சொல்ல வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என முடிவெடுகின்றனர். மறுபக்கம், இங்கே ரோகிணி, மயில்வாகனம் வாங்கி கொடுத்த ஒரு குழந்தையின் போட்டோவை வைத்துக்கொண்டு, என்னை மன்னித்துவிடு, எனக்கு உன்னைவிட என் அம்மா தான் முக்கியம், உன்னை இந்த கையில் தூக்குவதற்கு ஆசையாக இருந்தேன் ஆனால், இப்படி ஆகிவிட்டதே என கண் கலங்கி ஐ லவ் யூ என எழுதி இருந்ததை ஐ மிஸ் யூ என மாற்றி எழுதுகிறாள். மேலும், கருவை கலைப்பதற்காக யாரிடமும் சொல்லாமல் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











