ஜோசியர் சொன்ன பொய்.. ரோகிணியின் குழந்தை தப்புமா? கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி கார் விபத்து நடந்ததாக சொன்ன இடத்தை கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் சென்று பார்க்கின்றனர். அப்போது, இந்த இடத்தில் எப்படி விபத்து நடக்கும் எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு என்று சொல்கிறார். மேலும், எனக்கு வீட்டுக்கு வந்து ரோகிணியின் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் மேல சந்தேகமா இருக்கு, அவரை உண்மையை சொல்ல வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என முடிவெடுகின்றனர்.
மறுபக்கம், ரோகிணி, மயில்வாகனம் வாங்கி கொடுத்த ஒரு குழந்தையின் போட்டோவை வைத்துக்கொண்டு, என்னை மன்னித்துவிடு, எனக்கு உன்னைவிட என் அம்மா தான் முக்கியம், உன்னை இந்த கையில் தூக்குவதற்கு ஆசையாக இருந்தேன். ஆனால், நீ பொறந்தா என் அம்மா உயிருக்கு ஆபத்துன்னு சொல்றாங்க, அதற்கு ஏற்றார் போல அவங்களுக்கும் ஒரு ஆக்சிடென்ட் நடந்திருக்கு அதனால உன்ன வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் என்னை மன்னித்து விடு என வருத்தப்படுகிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரோகிணி கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி செல்கிறாள். மறுபக்கம் வீட்டிற்கு வரும் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும், எனக்கு அந்த ஜோசியர் மேல நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார். உடனே சந்திரகலா என்ன டிரைவர், புதுசா ஒரு நாடகத்தை போட்டு இருக்கியா, இங்கே அக்கா உயிருக்கு ஆபத்து வரப்போகிறது என நான் பயந்துக்கிட்டு இருக்கேன் நீ என்னமோ கதை சொல்லிக்கிட்டு இருக்க என்கிறாள். பின் மயில்வாகனம், அத்தை தயவு செய்து எங்ககூட வாங்க அந்த ஜோசியக்காரர் சொன்னது பொய் என்று நாங்க நிரூப்பிறோம் என்று சொல்கிறார்.
கார்த்தியின் பிளான்: ராஜராஜனும் மாப்பிள்ளை சொல்வதை ஒரு வாட்டி கேள் சாமுண்டீஸ்வரி அதன் பிறகு முடிவு எடுத்துக்கொள்ளலாம் என சொல்ல, சாமுண்டீஸ்வரியும் சரி நான் வருகிறேன் என சொல்ல அனைவரும் கிளம்பி செல்கின்றனர். இதனால், சந்திரகலாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். இதையடுத்து, கார்த்திக், தான் ஏற்பாடு செய்த ஒரு பெண்ணிடம் ரோகிணியின் ஜாதகத்தை கொடுத்து, ஜோசியரிடம் காட்டி சொல்கிறான். கார்த்திக் சொன்னது போல, அந்த பெண்மணி ஜோசியரிடம் சென்று,
ஜாதகத்தை கொடுத்து, இது என் பெண்ணோட ஜாதகம், அவ இப்போ கர்ப்பமா இருக்கா,
இந்த குழந்தை பிறந்தால் என் உயிருக்கு ஆபத்து என சொல்கிறார்கள். எனக்கு பயமா இருக்கு என்று சொல்கிறாள்.
சிவனாண்டி தான் காரணம்: பின் அந்த ஜாதகத்தை பார்த்த ஜோசியர்,, நீங்க 100 வயசு வரைக்கும் நல்லா இருப்பீங்க.. உங்க குடும்பம் பெரிய அளவுல வளர இந்த குழந்தை முக்கிய காரணமாக இருக்கும் என்று சொல்கிறார். இதை சாமுண்டீஸ்வரி, சந்திரகலா, ரேவதி, மயில்வாகனம் என அனைவரும் மறைந்து இருந்து கேட்டு விடுகின்றனர். பின் கோவத்தோடு உள்ளே வரும் மயில்வாகனம், நீ பார்த்தது என் பொண்டாட்டியோ ஜாதகம், நீ சரியான பித்தலாட்டக்காரன் என்று சொல்ல, அப்போது ஜோசியர் என்னை மன்னித்துவிடுங்க நான் பணத்திற்காக அப்படி சொல்லவில்லை, என் மகளையும், மனைவியையும் கொன்றுவிடுவதாக மிரட்டினாங்க அதனால், அப்படி சொன்னேன் என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











