ரோகிணியின் கர்ப்பத்தை காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபம்!

சென்னை: ஜாதகத்தை பார்த்த ஜோசியர், நீங்க 100 வயசு வரைக்கும் நல்லா இருப்பீங்க.. உங்க குடும்பம் பெரிய அளவுல வளர இந்த குழந்தை முக்கிய காரணமாக இருக்கும் என்று சொல்கிறார். இதை சாமுண்டீஸ்வரி, சந்திரகலா, ரேவதி, மயில்வாகனம் என அனைவரும் மறைந்து இருந்து கேட்டு விடுகின்றனர். பின் கோவத்தோடு உள்ளே வரும் மயில்வாகனம், நீ பார்த்தது என் பொண்டாட்டியோட ஜாதகம், நீ சரியான பித்தலாட்டக்காரன் என்று சொல்ல, அப்போது ஜோசியர் என்னை மன்னித்துவிடுங்க நான் பணத்திற்காக அப்படி சொல்லவில்லை, என் மகளையும், மனைவியையும் கொன்றுவிடுவதாக மிரட்டினாங்க அதனால், அப்படி சொன்னேன் என சொல்கிறார்.

உடனே சாமுண்டீஸ்வரி அப்பாவி இப்படி ஒரு பொய்யை சொல்லி இருக்கியே என்று சொல்லி ஆத்திரப்படுகிறாள். அப்போது, ஜோசியர் சிவனாண்டி தான் என் வீட்டுக்கு வந்து என் குடும்பத்தினரை மிரட்டினார் என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி கோபமாக வந்து ஜோசியரின் சட்டையை பிடித்து எதுக்கு இப்படி சொன்னீங்க என்று கோபப்படுகிறாள். இதுக்கு மேல அந்த சிவனாண்டிய சும்மா விடக்கூடாது, நம்ம குடும்பத்திற்கு வாரிசே வரக்கூடாது என்று நினைக்கிறான் அவனை சும்மா விடக்கூடாது என்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அதைத்தொடர்ந்து, மயில்வாகனம் அத்தை வாங்க இந்த நல்ல விஷயத்தை முதலில் ரோகிணியிடம் சொல்லலாம் அவள் கேட்ட ரொம்ப சந்தோஷப்படுவா என்று சொல்லிவிட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர். சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் வீட்டுக்கு வர, வீட்டில் ரோகிணி இல்லாதால், ரோகிணிக்கு போன் செய்து பார்க்க போன் அடித்துக்கொண்டே இருக்கிறது. ரோகிணி எங்கே போய் இருப்பா என்று அனைவரும் யோசிக்க, அப்போது ரேவதி, அக்கா காலையில் கோவிலுக்கு போவதாக சொன்னாங்க. ஆனால், இந்த நேரம் வந்து இருக்கணுமே, வீட்டுக்க வராமல் எங்கே போய் இருப்பா என அனைவரும் பயப்படுகின்றனர்.

நடக்கப்போவது என்ன?: இதையடுத்து, மயில்வாகனம் ரூமுக்கு வந்து பார்க்க குழந்தை போட்டோவில் ஐ மிஸ் யூ என எழுதி இருக்கிறது. இதைப்பார்த்து குழப்பம் அடையும் மயில்வாகனம் பதற்றம் அடைந்து அழத்தொடங்குகிறார். பின் ரோகிணியின் நம்பருக்கு தொடர்ந்து ஃபோன் செய்து கொண்டு இருக்க போனை எடுக்கும் நர்ஸ், ரோகிணி ஆப்ரேஷன் ரியேட்டரில் இருப்பதாக சொல்ல கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் ரோகினியை தேடி ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X