நிலத்தில் கிடைத்த தங்க புதையல்.. சாமுண்டீஸ்வரி எடுக்கும் முடிவு..கார்த்திகை தீபம்!
சென்னை: ரோகிணி மயக்கத்தில் இருந்து கண் விழித்து தன் குழந்தை கலைந்து விட்டது என நினைத்து கண்கலங்குகிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி வந்து நிற்கிறாள். நீ ஒன்னும் கவலைப்படாத உன் குழந்தைக்கு ஒன்னும் ஆகல, இந்த குழந்தைகளை என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொன்னதெல்லாம் சிவனாண்டியின் திட்டம் என்ற உண்மையை உடைக்கிறாள். பிறகு வீட்டுக்கு வந்த சாமுண்டீஸ்வரி என்னதான் உன் மேல எனக்கு கோபம் இருந்தாலும் இப்ப நீ செய்தது ரொம்ப நல்ல விஷயம் என கார்த்திக்கை பாராட்டுகிறாள். இதைப்பார்த்த சந்திரகலா இதை இப்படி விடக்கூடாது என முடிவெடுக்கிறாள். மேலும் இதே நேரத்தில் மயில்வாகனம் ஹோட்டல் பிசினஸ் செய்யப்போவது பற்றி அறிவிக்க அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
இதையடுத்து இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி தனது நிலத்தில் கோவில் ஒன்றை கட்டலாம் என முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்குகிறாள். அப்போது நிலத்தை தேண்டும் போது ஒரு சத்தம் கேட்க அதை தோண்டி பார்க்க மிகப்பெரிய பித்தளை பாத்திரம் ஒன்றை கிடைக்கிறது. அதில் இருந்து மஞ்சள் துணையால் கட்டப்பட்ட 3000 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்படுகின்றன.

கார்த்திகை தீபம்: இந்த தகவல் ஊர் முழுக்க பரவை அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பிறகு பஞ்சாயத்தை கூட்ட சிவனாண்டி இந்த நகையை ஊர்காரர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விடலாம் என சொல்கிறான். பூமிக்கு அடியில் கிடைத்தது அனைத்தும் அரசாங்கத்திற்கு தான் சொந்தம் ஆகையால் அரசாங்கத்திடம் இதை ஒப்படைத்து விடலாம் என சாமுண்டீஸ்வரி முடிவெடுக்கிறாள். இதனால் ஊர்க்காரர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்தாலும் பஞ்சாயத்து தலைவர் சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு தன் சரி என சொல்கின்றனர். மேலும் தொல்லியல் துறை நகையை மறுநாள் பெற்றுக் கொள்வதாக சொல்ல சாமுண்டீஸ்வரி அதனை தனது வீட்டு பீரோவில் வைத்து பூட்டுகிறாள்.
சிவனாண்டியின் பிளான்: சிவனாண்டி மற்றும் சந்திரகலா ஆகியோர் திட்டமிட்டு வெளியே சென்ற மயில் வாகனத்திற்கு மயக்கம் மருந்து கொடுத்து மயங்க மருந்து கலந்த டீயை கொடுத்து விட மயில்வாகனம் கீழே விழ அந்த விஷயம் சாமுண்டீஸ்வரி குடும்பத்துக்கு தெரிய அனைவரும் பதறி போய் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











