மயங்கி விழுந்த ராஜராஜன்.. கொள்ளையடிக்கப்படும் புதையல்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி தனது நிலத்தில் கோவில் ஒன்றை கட்டலாம் என முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்குகிறாள். அப்போது நிலத்தை தோண்டும் போது ஒரு சத்தம் கேட்க அதை தோண்டி பார்க்க மிகப்பெரிய பித்தளை பாத்திரம் ஒன்றை கிடைக்கிறது. அதில் இருந்து மஞ்சள் துணியால் கட்டப்பட்ட குவியல் குவியலாக தங்கம் இருக்கிறது. இந்த தகவல் ஊர் முழுக்க பரவ அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
பிறகு பஞ்சாயத்தை கூட்ட சிவனாண்டி இந்த நகையை ஊர்காரர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விடலாம் என சொல்கிறான். பூமிக்கு அடியில் கிடைத்தது அனைத்தும் அரசாங்கத்திற்கு தான் சொந்தம் ஆகையால் அரசாங்கத்திடம் இதை ஒப்படைத்து விடலாம் என சாமுண்டீஸ்வரி முடிவெடுக்கிறாள். இதனால் ஊர்க்காரர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்தாலும் பஞ்சாயத்து தலைவர் சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு தான் சரி என சொல்கின்றனர்.

சந்திரகலாவின் திட்டம்: இதையடுத்து, தொல்லியல் துறை நகையை மறுநாள் பெற்றுக் கொள்வதாக சொல்ல சாமுண்டீஸ்வரி அதனை தனது வீட்டின் ஒரு அறையில் வைத்து மூட்டுகிறாள். அந்த நகையை திருடும் படி சந்திரகலா சிவனாண்டியிடம் சொல்ல இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகின்றனர். அந்த திட்டத்தின்படி, ராஜராஜன் டீ கடைக்கு சென்றிருந்த அவனது டீயில் மயக்க மருந்தை சிவனாண்டியின் ஆள் கலந்து விடுகிறான். இதனால், டீயை குடித்த சிவனாண்டி அப்படியே மயங்கி விழ அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர், உடனே இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வர, வீட்டில் இருந்து அனைவரும் அனைவரும் பதறி போய் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர்.
நடக்கப்போவது என்ன: இந்த தகவலை சந்திரகலா நம்ம திட்டப்படி அனைவரும் ஹாஸ்பிடல் போய்ட்டாங்க இப்போ நீ வந்தா சரியாக இருக்கும் என சொல்கிறாள். மறுபக்கம், மருத்துவமனையில் ரேவதியிடம் கார்த்திக் நான் வீட்டுக்கு போறேன், வீட்டில் தங்கம் இருக்கு, அதே நேரம் மாமா திடீரென மயங்கி விருந்து இருக்கிறார். எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு நான்வீட்டுக்கு போகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இந்த சமயத்தில் வீட்டிற்குள் நுழையும் முத்துவேல் சந்திரகலாவின் உதவியுடன் புதையலாக கிடைத்த தங்க நகைகளை கடத்தி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக் இந்த சிக்கலை கையாளப்போவது எப்படி என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











