அவ பொம்பளையா? சாமுண்டீஸ்வரியால் தலைகுனிந்த கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி தனது மொத்த சொத்தையும் விற்று ஊர் மக்களுக்கு நகையை திருப்பி கொடுத்த திட்டம் போட்டு இருந்தார். ஆனால், கார்த்திக், ஊர் மக்களின் நகையை திருடிச்சென்றவர்களை திட்டம் போட்டு பிடித்து பஞ்சாயத்தின் முன் நிறுத்தி, நகை மீட்டு ஊர் மக்களிடம் கொடுக்கிறார். இதனால், சாமுண்டீஸ்வரியின் மொத்த சொத்தும் காப்பாற்றப்படுகிறது.
இதையடுத்து வீட்டுக்கு வரும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கு எதிராக கொம்பு சீவி விடுகிறாள். அப்போது, ரேவதி, சித்தி தேவையில்லாமல் அவரை பற்றி பேசாதீர்கள். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு போராடி நம்ப குடும்பத்தை மீட்டு இருக்கிறார். அப்படி இருக்கும் போது சித்தி இப்படி சொல்வது சரியில்லை.உண்மையில் அவரோட மனசு என்ன என்று யாருக்கும் தெரியாது. நிச்சயமாக உங்க வாயால் அவரை நீங்க மாப்பிள்ளை என்று கூப்பிடத்தான் போறீங்க என்று சொல்கிறாள். இதைக்கேட்டு சாமுண்டீஸ்வரி பதில் எதுவுமே சொல்லாமல் போகிறாள்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதியை ஒரு ஜோசியரை சந்திக்க அழைத்து வருகிறார். ரேவதி இங்க எதுக்கு வந்திருக்கும் என கேள்வி கேட்கிறாள். அப்போது கார்த்திக், அம்மாவுக்காக நினைவிடம் கட்ட போகிறேன். அதுக்காக நல்ல நாள் குறிக்க வந்து இருப்பதாக சொல்கிறார். இதையடுத்து, இருவரும் ஜோசியரை சந்திக்கின்றனர். அவரும் ஒரு நல்ல தேதியை குறித்து கொடுக்கிறார். ரொம்ப நல்ல விஷயம் கார்த்திக், இதை நாம சாதாரணமாக செய்யக்கூடாது, இந்த ஊரில் இருப்பவர்கள் அனைவரையும் அழைத்து வயிறு நிறை சாப்பாடு போட்டு திறக்க வேண்டும் என்றாள். மேலும், எனக்குத் தெரிந்த மத்திய அமைச்சர் ஒருவர் இருக்காங்க, அவங்கள வச்சு இந்த நினைவிடத்தை திறக்கலாம் என்று சொல்கிறாள். அப்போது கார்த்திக், வேண்டாம், ரேவதி, இந்த நினைவிடத்தை சாமுண்டீஸ்வரி அத்தை, அவங்க கையால திறந்து வச்சா நல்லா இருக்கும், அம்மாவும் அதற்குத்தான் ஆசைப்படுவாங்க என சொல்கிறான். ஆனால், நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான், அதற்கான வேலைகளை நான் கவனிக்கிறேன் எனவும் கார்த்திக் சொல்கிறான்.

சாவல் விடும் சந்திரகலா: பிறகு வீட்டுக்கு வந்து ரேவதி விஷயத்தை வைத்து சொல்ல சாமுண்டீஸ்வரி என்னால எல்லாம் இதை செய்ய முடியாது என கோபப்படுகிறாள். இதை பார்த்து ரசித்த சந்திரகலா கார்த்தியிடம் உன்னால இந்த விஷயத்துல எதுவும் பண்ண முடியாது என சவால் விடுகிறாள். கார்த்திக் அத்தை கையால எங்க அம்மா நினைவிடத்தை திறக்க வச்சிட்டா என்ன பண்ணுவீங்க என்று கேட்க சந்திரகலா அப்படி மட்டும் நடந்தா நானே அந்த நினைவிடத்தை தினமும் பெருக்கி வாரி சுத்தம் செய்து விளக்கு ஏற்றுவேன் என சவால் விடுகிறாள். ஒரு வேளை நான் தோத்து போயிட்டா இந்த வீட்டை விட்டு வெளியே போறேன் என கார்த்திக் சவால் விடுகிறான்.
இதைத் தொடர்ந்து கார்த்திக் நினைவிடம் திறப்பதற்கான வேலைகள் குறித்து மயில் வாகனத்துடன் பேசிக்கொண்டிருக்க இதை எல்லாம் ஒட்டு கேட்ட சந்திரகலா இதற்கு எதிராக ஏதாவது செய்யணும் என திட்டமிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











