கார்த்திக்கை ஏமாற்றிய சேட்டு.. நினைவிடம் திறக்க முடியுமா? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் சேர்த்து சேட்டு வீட்டிற்கு செல்கின்றனர். அப்போது, சேட்டு உயிருடன் இல்லை என அவரது மனைவி தெரிவிக்கிறார். மேலும் இப்போது தன்னுடைய மகன் தான் அனைத்து பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வதாக சொல்கிறார். இதையடுத்து, கார்த்திக் மயில்வாகனத்திடம் நினைவிடம் திறக்க பூமி பூஜை போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய சொல்கிறான். மேலும் அமைச்சரும் அத்தை சாமுண்டீஸ்வரியின் சேர்ந்து இந்த நினைவிடத்தை திறந்து வைப்பார்கள் என சொல்கிறான்.
மறுபக்கம் சிவனாண்டி கார்த்திக் சேட்டுவை சந்திக்க சென்ற விஷயம் அறிந்து அவரது மகனை சந்தித்து அந்த நிலத்தை யாருக்கும் கொடுத்துடாதீங்க.. நான் வாங்கிக்கிறேன் என்று சொல்ல சேட்டுவின் மகன் 50 கோடி ரூபாய் என்று சொல்ல சிவனாண்டி எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க நான் பணத்தை ரெடி பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். இதையடுத்து, அடுத்து என்ன நடக்கப் போவது என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ஜாக், ரேவதியை எப்படி கரெக்ட் செய்வது என யோசித்து ஒரு திட்டத்தை போடுகிறான். அதாவது, எண்ணெய்யை ஊற்றி வைத்து ரேவதி வழிக்கு விழப் போகும்போது பிடித்து விடலாம். என் கை அவள் மேலே பட்டால், அவளுக்கு தன் மீது காதல் வந்துவிடும் என திட்டம் போட்டு, ரேவதியின் வழிக்கு விளக்காக கார்த்திக் ஓடிவந்து தாங்கிப் பிடிக்க ஜாக்கின் திட்டம் அப்படியே தவிடு பொடியாகிறது.
சொந்த வீட்டில் திருடும் சந்திரகலா: இதைத்தொடர்ந்து, சிவனாண்டி சந்திரகலாவுக்கு ஃபோன் செய்து நிலத்தை வாங்குவதற்காக பணம் தேவை என்று சொல்ல சந்திரகலா சாமுண்டீஸ்வரி லாக்கரில் ஏதாவது டாக்குமெண்ட் இருக்கும் அதை வைத்து பணம் வாங்கிக் கொள்ளலாம் என திட்டம் போட்டு டாக்குமெண்ட்டை எடுக்க போக ரேவதி பார்த்து விடுகிறாள். ரேவதி கத்தி சத்தம் போட சந்திரகலா அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறாள். சந்திரகலா டாக்குமெண்ட் எதையோ எடுக்க பார்த்ததாக சொல்ல சந்திரகலா இல்லையென சமாளிக்கிறாள்.
ஏமாற்றிய சேட்டு: இதையடுத்து நினைவிடம் திறப்பதற்கான பத்திரிக்கை தயாராகி வீட்டுக்கு வர அதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ராஜராஜன் தங்கையை நினைத்து எமோஷனலாகிறார். பிறகு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் சேட்டுவின் மகனை சென்று சந்திக்க அப்பா கிட்ட நீங்க நிலத்தை வித்த மாதிரி தான் எழுதி கொடுத்து இருக்கீங்க, அதனால அப்பா அதை வேற யாருக்கோ விற்றுவிட்டார் என ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











