நிலத்தை ஏமாற்றிய சேட்.. கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்தி தனது அம்மா பெயரில் நினைவிடம் திறப்பதற்கான பத்திரிக்கை தயாராகி வீட்டுக்கு வர அதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ராஜராஜன் தங்கையை நினைத்து எமோஷனலாகிறார். பிறகு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் சேட்டுவின் மகனை சென்று சந்திக்க அப்பா கிட்ட நீங்க நிலத்தை வித்த மாதிரி தான், நீங்க எழுதி கொடுத்து இருக்கீங்க, அதனால அப்பா அதை வேற யாருக்கோ விற்றுவிட்டார் என ஷாக் கொடுக்கிறான்.
இன்றைய எபிசோடில், கார்த்திக் நான் அந்த மாதிரி எழுதி தரவே இல்லை என்று சொல்ல, சேட் பத்திரித்தை கொண்டு வந்து காட்டி, நீங்க தானே கையெழுத்து போட்டு இருக்கீங்க, இப்போ அப்பா உயிருடன் இல்லாததால் என்னை ஏமாற்ற பாக்குறீங்களா என்று கேட்கிறான். இதனால், ஆத்திரப்படும் மயில்வாகனம, உன்னை ஏமாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நான் கோர்ட்டில் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு இருவரும் வெளியே வருகின்றனர். அப்போது, கார்த்திக், நம்ம நிலத்தை யாருக்கோ சேட் விற்க பார்க்கிறான். அவனை சும்மா விடக்கூடாது என்கின்றனர்.

கார்த்திகை தீபம்: அதாவது, சேட் சிவனாண்டிக்கு ஃபோன், நீங்க சொன்ன மாதிரி, கார்த்திக் இங்கே வந்தான். நான் அவங்க கிட்ட நீ சொன்ன மாதிரியே சொல்லிட்டேன். அவனும் அது உண்மை என நம்பி விட்டான். நீங்க 50 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து அந்த நிலத்தை வாங்கிக்கோ இல்லனா வேற யாருக்காச்சும் நிலத்தை விற்று விடுவேன் என்று சொல்கிறான். உடனே சிவனாண்டி, கண்டிப்பா பணத்தை கொடுத்து அந்த நிலத்தை சொன்ன மாதிரி வாங்கி கொள்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.
நிலத்தை அபகரித்த சேட்: அடுத்து கார்த்தியும் மயில்வாகனம் அடுத்து என்ன செய்வது என்று பேசி கொண்டிருக்கும் போது ஒரு போன் கால் வருகிறது. அதில், சிலை தயாராகிவிட்டதாக சொல்ல, கார்த்திக் சிலையை நினைவிடம் கட்டும் இடத்திற்கு அனுப்பிவிடுங்கள் என சொல்கிறார். அதன் பின் கார்த்திக் அங்கு சென்று, நினைவிடம் கட்டுவதற்காக இடத்தை சீர் செய்து கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் சேட்டின் மகன், இந்த இடத்தை எங்களுக்கு எழுதி கொடுத்திட்டு இப்போ வேற எதையோ கட்ட பார்க்கிறாங்க என்று போலீல் புகார் கொடுக்கிறான்.
இதனால் மயில்வாகனம் என்னப்பா செய்யுறது என்று கேட்க கார்த்திக் ஒரு திட்டத்தை சொல்கிறான். இதனை தொடர்ந்து, ஒருவர் சிவனாண்டிக்கு ஃபோன் செய்து, 50 கோடி ரூபாய் பணத்தை கொடுப்பதாக சொல்ல சிவனாண்டி அங்கு கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











