சொந்த நிலத்தை பணம் கொடுத்து வாங்கும் கார்த்திக்.. காத்திருக்கும் ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், இது எல்லாமே சிவனாண்டி வேலை தான் என்பதை தெரிந்து கொண்ட கார்த்திக். மயில்வாகனத்திடம் ஒரு திட்டத்தை சொல்கிறார். இதையடுத்து, மயில்வாகனம் குரலை மாற்றி வேறு ஒரு ஆள் போல பேசி பணம் தருவதாக சொல்கிறார். அதை உண்மை என நம்பிய சிவனாண்டி தனது சித்தப்பாவுடன் சேட் வீட்டுக்கு சென்று பேச, சேட், நாளைக்கு காலை 9 மணிக்கு பணத்தை தருகிறேன். ஆனால், ஒரு மாதத்து வட்டியை எடுத்துக்கொண்டுதான் தருவேன் என்று சொல்கிறார். எல்லாத்துக்கும் ஒகே சொல்லி விட்டு இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். இதையடுத்து, இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலை செய்யும் மீனாட்சி என்னுடைய கணவருக்கு இறந்த நாள்.. திதி கொடுக்க போகணும் என்று லீவ் கேட்டு கிளம்பி செல்கிறாள். கோவிலில் குளத்தின் அருகே தன்னுடைய கணவரின் போட்டோவை வைத்து திதி கொடுக்கிறார். இதே கோவிலுக்கு ரேவதியும் அவளது அக்காவுடன் வந்திருக்க இந்த போட்டோவை பார்த்து விடுவார்களா? மீனாட்சி யார் என்ற உண்மை தெரிய வருமா? என்ற பில்டப் காட்சிகள் எகிறுகிறது. ஆனால், இருவருமே அந்த போட்டோவை பார்க்காமல் போய்விடுகின்றனர். பின் ரேவதி, சாமியாரை சந்தித்து, வீட்டில் எப்போதும் ஏதாவது பிரச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. நானும் என் கணவரும் சந்தோஷமாகவே இல்லை என்று அனைத்து பிரச்சனைகளையும் சொல்கிறார். அப்போது சாமியார், வீட்டில் இருக்கும் பிரச்சனை குறைய சுமங்கலி பூஜை நடத்தி, சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போட வேண்டும். அவர்கள் வாழ்த்தினால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்.
சுமங்கலி பூஜை: மறுபக்கம் கார்த்திக், கோவிலுக்கு வர மீனாட்சியை சந்திக்கிறான், அவளிடம் உங்க கணவர் பெயர் என்ன என்று கேட்க அதற்குள் அவளுக்கு ஒரு போன் கால் வர ஒரு நிமிஷம் என அங்கிருந்து கிளம்பி வருகிறாள், அடுத்து அடுத்து, கார்த்திக் தன்னுடைய நிலத்தை 50 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடப்பதை தெரிந்து கொண்டு, அந்த நிலத்தை வாங்கி கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











