அபிராமி நினைவிடத்தில் அணுகுண்டா? சதிகளை வெல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக், கோவிலுக்கு வர மீனாட்சியை சந்திக்கிறான், அவளிடம் உங்க கணவர் பெயர் என்ன என்று கேட்க அதற்குள் அவளுக்கு ஒரு போன் கால் வர ஒரு நிமிஷம் என அங்கிருந்து கிளம்பி வருகிறாள். இதையடுத்து, சிவனாண்டி, முத்துவேல், சந்திரகலா அனைவரும் ரிஜிஸ்டர் ஆபிசில் பஜன்லால் சேட்டுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். அங்கு வரும் கார்த்திக்கை பார்த்த சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். பின் கார்த்திக் 50 கோடி பணம் வேண்டும் என கேட்டு இருந்தால் தானே கொடுத்து இருப்பேன் என்று சொல்ல, சேட் கார்த்திக்கிற்கு நிலத்தை கொடுத்து விடுகிறான்.
நிலத்தை 50 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து அந்த நிலத்தை வாங்கி கொள்கிறான் கார்த்திக். மேலும், சந்திரகலாவை பார்த்த கார்த்திக், சின்ன அத்தை, அம்மாவின் நினைவு இடத்தை சுத்தம் செய்வதற்கு தயாராக இருங்க என்று கிண்டன் செய்கிறான். இதனால், ஆத்திரப்படும் சந்திரகலா இந்த முறையும் அவன் ஜெயித்துவிட்டான். அந்த சிலை திறப்பு விழா நடக்கக்கூடாது என்கிறாள்.

கார்த்திகை தீபம்: மறுப்பக்கம் சேட்டு,பணப்பையை திறந்து பார்க்க அதில் 5 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே இருக்கிறது. மீதி அனைத்து பணங்களும் காகிதங்களாக இருப்பதை பார்த்துவிட்டு கார்த்திக்கு போன் செய்து, பணத்தை கொடுப்பது போல கொடுத்து ஏமாற்றிவிட்டீங்களா.. பணம் எங்கே என்று கேட்கிறான். நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும், வட்டியும் சேர்த்து அதுல இருக்கு, என்னால அவ்வளவுதான் கொடுக்க முடியும் என ஷாக் கொடுக்கிறான். போலீசுக்கு போறதுன்னா கூட தாராளமா போங்க, ஆனா மாட்டுவது நீங்க தான், இப்போ பத்திரம் என் பெயரில் தான் இருக்கு என செக் மேட் வைக்க சேட்டு எதுவும் செய்ய முடியாமல் கிளம்பி செல்கிறான்.
சிலையை தகர்க்கும் திட்டம்: இதைத்தொடர்ந்து நினைவிடம் அமைக்கும் இடத்தை சுத்தம் செய்யும் வேலைகள் நடக்கிறது. மயில்வாகனம் சாமுண்டீஸ்வரி அத்தை நினைவிடத்தை திறந்து வைப்பார்களா என்று கேட்க கண்டிப்பா வருவாங்க ஏதாவது செய்யலாம் என கார்த்தி சொல்கிறான். வீட்டில், திட்டம் தோல்வி அடைந்த கோவத்தில் இருக்கும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை ஏற்றி விட அவள் என்ன நடந்தாலும் கண்டிப்பா நான் அந்த நினைவிடத்தை திறந்து வைக்க போக மாட்டேன் என சபதம் எடுக்கிறாள். சிவனாண்டி, முத்துவேல் ஆகியோர் அபிராமி நினைவிடம் அமைக்கும் இடத்தில் பாம் வைக்க திட்டமிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











