சிலை திறப்பு விழாவில் டைம் பாம்.. கார்த்திக்கை கொல்ல நடக்கும் சதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், கார்த்திக் ஏமாற்ற நினைத்த சேட்டுக்கே ஆப்பு வைத்து பணத்தை கொடுத்து டாக்குமெண்டை கைப்பற்றி விடுகிறார். அதன்பின் சேட்டு பணப்பையை திறந்து பார்க்க அதில் 5 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே இருக்கிறது மீதி அனைத்தும் காகிதங்களாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். உடனே சேட் கார்த்திக்கிற்கு ஃபோன் செய்து, மீதி பணம் எங்கே, என்னை நல்லா ஏமாற்றிவிட்டீங்க என்று கேட்கிறான். நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும் வட்டியும் சேர்த்து அதுல இருக்கு, அது தான் நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் என்கிறார்.மேலும், போலீசுக்கு போறதுன்னா கூட தாராளமா போங்க. ஆனா மாட்டுவது நீங்களா தான் இருப்பீங்க என செக் மேட் வைக்க சேட்டு எதுவும் செய்ய முடியாமல் போனை வைக்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், நினைவிடம் அமைக்கும் இடத்தை சுத்தம் செய்யும் வேலைகள் நடந்து கொண்டு இருக்க, மயில்வாகனம் சாமுண்டீஸ்வரி அத்தை நினைவிடத்தை திறந்து வைப்பார்களா என்று கேட்க கண்டிப்பா வருவாங்க ஏதாவது செய்யலாம் என கார்த்தி சொல்கிறான். மறுபக்கம் சந்திரகலா, அக்கா அந்த டிரைவர் ராஜா நீ சிலை திறப்பு விழாவிற்கு வரவேண்டும் என நிச்சயம் ஏதாவது செய்வான் அக்கா என சாமுண்டீஸ்வரியை ஏற்றி விட அவள் என்ன நடந்தாலும் கண்டிப்பா நான் அந்த நினைவிடத்தை திறந்து வைக்க போகமாட்டேன் என சபதம் எடுக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: பின், அபிராமி நினைவிடத்தை அமைச்சர் வந்து திறக்க இருப்பதால் போலீஸ் அங்கு வந்து இடத்தை சோதனை செய்துவிட்டு, எந்த ஒரு பிரச்சனையும் இல்லை இடம் பாதுகாப்பாக இருக்கிறது என திரும்பிச் சென்று விடுகின்றனர். அதன் பிறகு சிவனாண்டியும் அவனது சித்தப்பா முத்துவேலும் இன்னும் சில ஆட்களும், வெடி குண்டை காலையில் 10 மணிக்கு அதாவது அமைச்சர் வரும் நேரத்தில் வெடிக்கும் படி ஏற்பாடு செய்து சிலைக்கு பின்னால் வெடி குண்டை வைக்கின்றனர்.

கார்த்தியின் பிளான்: மறுபக்கம், வீட்டில் கார்த்திக் நினைவிடம் திறப்பு விழாவிற்காக வீட்டில் உள்ள அனைவருக்கும் புது துணி எடுத்து கொடுக்க சாமுண்டீஸ்வரி அதை வாங்க மறுக்கிறாள். இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஊர்காரர்கள் நினைவுடன் திறப்பதற்காக ஊர் தலைவர் என்ற முறையில் நீங்க வரவேண்டும் என சாமுண்டீஸ்வரி அழைக்கின்றனர். உடனே சாமுண்டீஸ்வரி, இதெல்லாம் முடியாது. இது ஒன்னும் ஊர் திருவிழா இல்ல, தனிப்பட்டவரின் திருவிழா இதில் நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என சொல்லி மறுப்பு தெரிவிக்கிறாள். அப்போது, மக்கள் நீங்க சொல்வது சரிதான், ஆனால், சிலை திறப்பு விழாவிற்கு அமைச்சர் வரும் போது, நீங்க கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும், அது ஊர் தலைவரின் பொறுப்பு என்கின்றனர். இதனால், வேறு வழியே இல்லாமல் சாமுண்டீஸ்வரி ஒப்புக்கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X