கட்டம் கட்டிய கார்த்தி.. யாரும் எதிர்பாராத அதிரடியான கதைக்களம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் தோழியின் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர் கொடுக்கின்றனர். இதையடுத்து, மீனாட்சி சமைக்கும் நேரத்தில் இருவரும் அந்த ஊரை சுற்றி பார்த்து வருகின்றனர். போகும் வழியில் மாங்காய் தோட்டத்தை பார்த்து மாங்காய் சாப்பிட வேண்டுமென ஆசைப்படுகிறாள். கார்த்திக் தோட்டத்து காரரிடம் பேசி வாங்கி தருவதாக சொல்ல ரேவதி திருட்டு மாங்காய் தான் ருசியா இருக்கும் என்று சொல்கிறாள். இதனால் கார்த்தியும் ரேவதியும் தோட்டத்துக்குள் புகுந்து கல் எடுத்து அடிக்க அந்த கல் தோட்டத்தின் உரிமையாளர் தலையில் விழுந்து அவர் இவர்களை கத்த இருவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

பிறகு இருவரும் சேர்ந்து கம்மாய்க்கு வருகின்றனர். தனித்தனியாக மீன் பிடிக்கின்றனர், ஆனால் யாருக்கும் மீன் கிடைக்காததால் பிறகு இருவரும் சேர்ந்து புடவை முந்தானையில் மீன் பிடிக்க முயற்சிக்க மீனும் கிடைக்கிறது, பிறகு இதை சுட்டு சாப்பிடுகின்றனர். ரேவதி குழந்தைப்போல விளையாடுவதைப் பார்த்த கார்த்திக் சந்தோஷப்படுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில், ஊரை சுற்றி பார்த்துவிட்டு மனம் விட்டு பல விஷயங்களை பேசி விட்டு தோழி மீனாட்சி வீட்டுக்கு வருகின்றனர். அப்போது. மீனாட்சி என் கணவர் காலில் கடடு போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்கிறார். மீனாட்சி தனது கணவரின் அருகில் அமர்ந்து கொண்டு வருத்தமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: பின் கார்த்திக் என்ன நடந்தது என்று விசாரிக்க அப்போது மீனாட்சியின் கணவர் சரவணன், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் கோயிலுக்குள் செல்ல முடியும். அப்படி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக ரவுடிகளை வைத்து என் காலை உடைத்து விட்டார்கள் என சொல்கிறார். இதைக் கேட்டு ஆத்திரப்படும் கார்த்தி யார் அப்படி செய்தது என கேட்கிறார். அவர் தான் இந்த ஊரின் பெரிய நபர் அவர் பெயர் முத்துவேல் என்று சொல்கிறார். உடனே கார்த்திக், நான் போய் முத்துவேலிடம் சென்று, கபடி போட்டியை இன்னும் ஒரு மாதம் கழித்து வைத்துக்கொள்ளலாம் என்று பேசி பார்க்கிறேன் என்று சொல்கிறார். ஆனால், சரவணன், அதெல்லாம் சரிப்பட்டு வராது, இந்த போட்டி நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் முத்துவேல் இப்படி செய்தார். அவர் தான் இந்த ஊரோடு பெரிய ரௌடி, எங்களால் உங்களுக்கு எதற்கு தேவையில்லாத வேலை என்கிறார் சரவணன்.

தெறிக்கவிட்ட கார்த்தி : ஆனால், கார்த்திக், முத்துவேல் வீடு எங்கே இருக்குனு சொல்லுங்க நான் பார்த்து பேசிவிட்டு வருகிறேன் என்கிறார். இதையடுத்து, சரவணின் நண்பர்களும் அவர் சண்டை போடவா போகிறார், அவர் கூட நாங்களும் போய் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அனைவரும் கிளம்புகின்றனர். இதையடுத்து, கார்த்திக், முத்துவேல் வீட்டுக்கு செல்ல அங்கு இருக்கும் அடியாட்கள் அவரை பார்க்க முடியாது, முதலில் நீ யாரு, உன் கூட எல்லாம் என் அண்ணா பேச மாட்டார் என்று கேலி செய்கின்றனர். உடனே கார்த்திக் நான் கபடி போட்டி பற்றி பேச வந்தேன், இரண்டு நிமிடம் அவரிடம் பேசிவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்ல, அடியாட்கள் அதெல்லாம் முடியாது என்று சொல்கின்றனர். இதனால், ஆத்திரப்படும் ஒரு மாஸ்டர் திட்டத்தை போட்டு அனைவரையும் அலறிவிடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X