புது வில்லனின் சதி.. கடத்தப்படும் ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திக், முத்துவேல் வீட்டுக்கு செல்ல, அங்கு இருக்கும் அடியாட்கள் அவரை பார்க்க முடியாது, முதலில் நீ யாரு, உன் கூட எல்லாம் என் அண்ணா பேச மாட்டார் என்று கேலி செய்கின்றனர். உடனே கார்த்திக் நான் கபடி போட்டி பற்றி பேச வந்தேன் என்று சொல்கிறார். ஆனால், முத்துவேல், இந்த போட்டி நடக்கவே நடக்காது, இது உங்க ஊர் பிரச்சனை, உனக்கும் இந்த ஊருக்கு எந்த சம்மந்தமும் இல்லை. ஒழுங்கா இந்த ஊரைவிட்டு ஓடு இல்ல என்றால், ஓட வைப்பேன் என்று சொல்கிறார். உடனே கார்த்தி, இந்த கபடி போட்டியில் சரவணனுக்கு பதிலாக வேறு ஒரு ஆள்விளையாடுவார் போட்டி நிச்சயமாக நடக்கும் என்கிறார்.

இதையடுத்து, வீட்டுக்கு வரும் கார்த்திக், நிச்சயமாக போட்டி நடக்கும் சரவணன் நீங்க எதை பத்தியும் கவலைப்படாமல் நிம்மதியாக ஓய்வு எடுங்க என்று சொல்லும், கார்த்திகை தன்னுடைய நண்பர் இளையராஜாவுக்கு ஃபோன் ஊருக்கு வர சொல்கிறார். உடனே இளையராஜா உன்னுடைய மாமியார் சாமுண்டீஸ்வரிக்கு தான் எல்லா விஷயமும் தெரிந்து விட்டதே, மீண்டும் ஊருக்கு வந்தால் சாமுண்டீஸ்வரி என்னை சும்மா விட மாட்டார்கள் என்று கிண்டலாக சொல்ல, அப்போது கார்த்தி நம்ம ஊருக்கு இல்ல, வேற ஒரு ஊருக்குவா என சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதையடுத்து, முத்துவேல் தன்னுடைய ஆட்களிடம் கார்த்தி இந்நேரம் என்னை பார்த்து பயந்து ஊருக்கு போய் இருப்பான் என்று பார்த்தால் எனக்கே சவால் விடுகிறான். அவனை பார்த்தா, சாதாரண ஆள் போல தெரியவில்லை, இந்த கபடி போட்டியில் அவர்களின் டீம் மட்டும் வென்று விட்டால் கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள். அது நடக்கக்கூடாது. அதுமட்டும் எந்த காலத்திலும் நடக்கக்கூடாது, கார்த்திக்கின் மனைவி ரேவதியை கடத்தி விடுங்கள் என சொல்கிறான்.

கடத்தப்படும் ரேவதி: இதையடுத்து மீனாட்சி, ரேவதி இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அவர்களை பின் தொடர்ந்து செல்லும் முத்துவேலின் ஆட்கள்,ரேவதி தனியாக இருக்கும் நேரத்தை பார்த்து ரேவதியை கடத்தி விடுகின்றனர். கோவிலில் இருக்கும் மீனாட்சி பல இடங்களில் ரேவதியை தேடியும் ரேவதி கிடைக்காததால், பதறி போய் விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்கிறாள். மேலும் இது முத்துவேலின் வேலையாக தான் இருக்கும் என கதறி அழுகிறாள். உடனே, கார்த்திக் மீனாட்சியை சமாதானப்படுத்திவிட்டு, நீங்க அமைதியா இருங்க, நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் கவலைப்படாதீர்கள் என சொல்கிறான். இதையடுத்து கார்த்திக் ரேவதியை எப்படி மீட்டார்... கபடி போட்டியில் வென்றாரா.. இல்லையா.. என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X