சொக்கப்பனைக்குள் ரேவதி வைத்து எரிக்க நினைக்கும் முத்துப்பாண்டி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் தனியாளாக எதிரணி அனைவரையும் அவுட் செய்து கபடி போட்டியில் ஜெயிக்கிறான். இதைப்பார்த்து ஊர்மக்கள் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஊர் மக்கள் அனைவரும் கோவிலுக்குள் நுழைய காரணமாக இருந்த கார்த்திகை கொண்டாடுகின்றனர். இதனால் கடுப்பாகும் முத்துப்பாண்டி கார்த்திக்கை பழிதீர்க்க ரேவதியை கடத்தி அவனுக்கு வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத வலியை நாம அவனுக்கு தரவேண்ம். அவளை கடத்தி ஊர் மக்கள் எல்லாரும் எரிக்கும் சொக்கப்பனைக்குள் வைத்து விடுங்க என சொல்கிறான். முத்துவேல் சொன்னதுபடி, ரௌடிகள் ரேவதி கடத்தி சொக்கப்பனைக்குள் வைத்து விடுகின்றனர்.

கார்த்திக் பல இடத்தில் ரேவதியை காணவில்லை தேடி அலைகின்றனர்.அப்போது மீனாட்சி, இது நிச்சயமாக முத்துவேலின் வேலையாக தான் இருக்கும். என சொல்ல கார்த்திக் முத்துவேலை தேடி வீட்டுக்கு செல்கிறான். ஆனால், முத்துவேல் அங்கு இல்லாததால், முத்துவேலின் மனைவியிடம் ரேவதி பற்றி கேட்கிறான். அப்போது, கார்த்திக் முறைப்படி படி போட்டியில் வெற்றி பெற்று தான் கோயிலுக்குள் நுழைகிறோம். ஆனால் உங்கள் கணவர் தவறு செய்கிறார். என் மனைவி காணவில்லை நிச்சயமாக அவரை முத்துவேல்தான் கடத்தி இருப்பார். உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொல்லுங்க என கேட்கிறார். அப்போது, முத்துவேலின் மனைவி கடத்தி சொக்கப்பனைக்குள் வைத்து கொளுத்த சொல்லி இருக்கிறார். இப்படித்தான் ஆட்களில் பேசிக்கொண்டு இருந்தார். தயவு செய்து நீங்க காப்பாத்துங்க என்று சொல்கிறார்.
ரேவதிக்கு என்ன ஆச்சு: மறுபக்கம் சொக்கப்பனைக்குள் ரேவதி, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி இருக்கிறார். கார்த்திக் பல இடங்களில் தேடியும் எந்த சொக்கப்பக்குள் இருக்கிறாள் என்று தெரியாமல் தவிக்கிறார். இதையடுத்து, கார்த்திக், முத்துவேல் இருக்கும் இடத்தை தேடி சென்று அவனையும், அவனது அடி ஆட்களையும் அடி அடி என வெளுக்கிறார். இதையடுத்து ரேவதியை கார்த்திக் எப்படி காப்பாற்றினார் என்பதை தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம்சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











