ரேவதியை காப்பாற்ற போராடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கபடி போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றதால் ஆத்திரப்படும் முத்துபாண்டி, கார்த்தியின் மனைவி ரேவதியை கடத்தி சொக்கப்பனைக்குள் வைத்துவிடுகிறார். ரேவதி, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி இருக்கிறார். கார்த்திக் பல இடங்களில் தேடியும் எந்த சொக்கப்பக்குள் இருக்கிறாள் என்று தெரியாமல் தவிக்கிறார். இதையடுத்து, முத்துப்பாண்டியின் மனைவி இதெல்லாம் வேண்டாம் தடுக்க முயற்சி செய்ய முத்துப்பாண்டி அவளை ரூமுக்குள் அடைத்து வைக்கிறான்.
இதையடுத்து, இன்றைய எபிசோடில் முத்துப்பாண்டி, ரேவதியை கடத்திய விஷயம் தெரியவர, அனைவரும் ஆத்திரப்பட்டு, இதுக்கு மேல அவனை சும்மாவிடக்கூடாது அவனுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்கின்றனர். அப்போது கார்த்திக், எதுவும் செய்ய வேண்டாம், இந்த ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று தான் நான் போட்டியில் கலந்து கொண்டே, இப்போது என்னால் இந்த ஊரில் பிரச்சனை வருவதை நான் விரும்பவில்லை. இந்த விஷயத்தை நானே பார்த்துக்கொள்கிறேன். இதில் நீங்க யாரும் தலையிட வேண்டாம் என்கிறார்.

கார்த்திகை தீபம்: கார்த்திக் ரேவதியை தேடி பல இடத்தில் அலைந்து கொண்டு இருக்க, அப்போது முத்துப்பாண்டியனின் மனைவி வீட்டின் பின்பக்கமாக ஓடி வந்து, கார்த்தியை சந்தித்து உங்கள் மனைவியை என் கணவர் ரௌடிகளைவைத்து கடத்தி சொக்கப்பனைக்குள் அடைத்து வைத்து இருக்கிறார். என்னால் முடிந்தவரை அவரை தடுத்து பார்த்தேன் ஆனால், அவன் என் பேச்சை கெட்கவில்லை என சொல்கிறார், இதையடுத்து கார்த்திக் அந்த இடத்திற்கு விரைந்து செல்கிறார். அப்போது முத்துபாண்டி தனது அடியாட்களிடம் அந்த வெளி ஊரு காரனுக்கு அவன் பொண்டாட்டி இருக்கும் இடம் தெரிந்து விட்டது. அதனால் சீக்கிரத்தில் அவளின் கதையை முடித்து விடுங்கள், சொக்கபனையை கொளுத்துங்கள் என சொல்ல சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சொக்கப்பனைக்குள் ரேவதி மயங்கிய நிலையில் இருக்க எப்படியோ போராடி அடியாட்களை அடித்து விட்டு தீயை அணைத்து ரேவதியை காப்பாற்றுகிறான் கார்த்திக். மயக்கத்தில் இருக்கும் ரேவதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்க, ரேவதிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து அவளை காப்பாற்றுகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











