இரவு 10மணிக்கு தனியா வரவும்.. முத்து படபாணியில் கார்த்திற்கு ரேவதி எழுதிய கடிதம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் இன்று முதல் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ள இருக்கும் நிலையில் சனிக்கிழமை எபிசோடில், சொக்கப்பனைக்குள் ரேவதி, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி இருக்கிறார். கார்த்திக் பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், முத்துவேலின் மனைவி வீட்டில் இருந்து தப்பி ஓடிவந்து, என் கணவர் தான் உங்க மனைவி ரேவதியை கடத்தி சொக்கப்பனைக்குள் வைத்து கொளுத்த போகிறார்.சீக்கிரம் போய் காப்பாத்துங்க என்று சொல்கிறாள்.
இன்றைய எபிசோடில், கார்த்திக் காரை வேகமாக ஓட்டிவந்து, சொக்கபனை கொளுத்த விருந்த நேரத்தில் தடுத்து நிறுத்துகிறார். பின், முத்துபாண்டி என் மனைவியை கடத்தி இந்த சொக்கபனைக்குள் வைத்து கொளுத்த பார்த்தார் என்று சொல்லி, சொக்கப்பனையில் இருக்கும் ரேவதியை மீட்கிறான். உடனே ஊர் மக்கள் முத்துப்பாண்டியை அடிக்கப் போக, அவர்களை தடுத்து நிறுத்தும் கார்த்திக், உன்னுடைய மனைவிக்காக உன்னை மன்னித்துவிடுகிறேன். இதுக்கு மேல இந்த தவறை செய்யாதே என்று சொல்கிறான். மேலும்,இந்த சொக்கப்பனை நீ கொளுத்து, அத்தோட உன்னோட திமிரு, ஆணவம் எல்லாத்தையும் சேர்ந்து கொளுத்து என்று சொல்ல முத்துப்பாண்டி மனம் திருந்தி கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டு சொக்கப்பனை கொளுத்துகிறான். பிறகு கார்த்திக், ரேவதி அங்கிருந்து வீட்டிற்கு கிளம்புகின்றனர்.

கார்த்திகை தீபம்: ரேவதி கடத்தப்பட்ட விஷயம் அறிந்த சாமுண்டீஸ்வரி கார்த்திக் வந்ததும் அவளை எதற்கு வெளியே கூட்டிட்டு போன என்று சத்தம் போடுகிறாள். கார்த்திக் இன்னமும் நாங்க சட்டபூர்வமா புருஷன் பொண்டாட்டி தான் நாங்க சேர்ந்து இருக்க வேண்டும் என்று சொல்லி தான் கோர்ட்டு உத்தரவு போட்டதுக்கு என்று பதிலடி கொடுக்க சாமுண்டீஸ்வரி கோபமடைகிறாள். இதைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரி எல்லோருக்கும் பொங்கலுக்காக துணி எடுத்துக் கொடுக்க கார்த்திக் மட்டும் கொடுக்காமல் விடுகிறாள். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி பார்க்க வந்த மினிஸ்டர் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் துணிமணிகளை கொடுத்து சாமுண்டீஸ்வரி கையால் கொடுக்க சொல்ல வேறு வழியில்லாமல் கார்த்திக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பிறகு கார்த்தியின் ஏற்பாட்டால் தான் மினிஸ்டர் இங்கு வந்தார் என்பது தெரிய வருகிறது.
முத்துபட பாணி: அதன் பிறகு ரேவதி கார்த்திக்கு பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கடிதத்தில் இரவு 10 மணிக்கு தோட்டத்திற்கு வரவும் பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்று எழுதி முத்து பட பாணியில் அதை தூக்கி வீச அந்த கடிதம் ஒவ்வொருத்தர் கைக்கும் கை மாறுகிறது. கடைசியில் சந்திரகலாவும் இந்த லெட்டரை பார்த்து படித்து விட்டு கார்த்திக் ரேவதி சந்திப்பதற்காக போடப்பட்ட திட்டம் என தெரிந்து கொள்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரிக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இதை எப்படியாவது தடுக்கணும் என ஏற்றி விடுகிறாள். இரவு 10 மணிக்கு மேல் எல்லோரும் தோட்டத்தில் கூட ரேவதி கார்த்திக்கு பொங்கல் பரிசு கொடுக்க போக அங்கு வந்த சந்திரகலா அதை பறித்து தூக்கி வீசி உடைத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்க Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











