காதல் கணவருக்காக ரேவதி வாங்கிய கிப்ட்.. சந்திரகலா செய்த சதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: நேற்றைய எபிசோடில் ரேவதி, கார்த்திக்கு பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கடிதத்தில் இரவு 10 மணிக்கு தோட்டத்திற்கு வரவும் பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்று எழுதி முத்து பட பாணியில் அதை தூக்கி வீச அந்த கடிதம் ஒவ்வொருத்தர் கைக்கும் கை மாறுகிறது. கடைசியில் சந்திரகலாவும் இந்த லெட்டரை பார்த்து படித்து விட்டு, கார்த்திக் ரேவதி சந்திப்பதற்காக போடப்பட்ட திட்டம் என தெரிந்து கொள்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரிக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இதை எப்படியாவது தடுக்கணும் என ஏற்றி விடுகிறாள்.
கார்த்திக்கிற்கு கிப்ட் கொடுக்க ஆசைப்பட்டு ஹார்டின் வடிவத்தில் ஒரு பொருளை வாங்கி ஒரு பக்கம் கார்த்தியின் பெயரையும் மறுபக்கம் அவளது பெயரையும் எழுதி அதை பரிசாக கொடுக்க தயாராகிறாள். இதை கெடுக்க வேண்டும் என நினைத்த சந்திரகலா, ரேவதியின் அறைக்கு வந்து, அவள் ஆசையாக கார்த்திக்கு கொடுக்க வைத்து இருந்த, பரிசு பொருளை உடைத்து விடுகிறாள். இந்த பரிசு இருந்தால் தானே நீ அவனுக்கு கொடுப்பா, என பரிசை உடைத்து வீசுகிறாள். அறையில் இருந்து சந்திரகலா வெளியே வருவதை பார்த்த ரேவதி, சித்திக்கு நம்ம ரூமில் என்ன வேலை, ஒரு வேளை கிப்டை எடுத்து இருப்பார்களா என பதட்டத்தோடு சென்று பார்க்கிறாள். கிப்ட் அங்கே இல்லாததால் பல இடங்களில் தேடுகிறாள்.

கார்த்திகை தீபம்: அப்போது மயில்வாகனம், என்னவென்று கேட்க, நான் கார்த்திக்காக ஆசையாக ஒரு பரிசு பொருளை வாங்கி வைத்திருந்தேன். ஆனால், இப்போது அது காணவில்லை, சித்தி தான் என்னுடைய அறைக்கு வந்து சென்றார்கள் என சொல்ல, அப்போது மயில்வாகனம், அவங்க தான், ஏதாவது செய்து இருப்பார்கள் என்று சொல்ல, அப்போது கட்டிலுக்கு அடியில் அந்த கிப்ட் உடைந்து இருக்கிறது. இதை பார்த்து ஆத்திரப்படும் ரேவதி, சந்திரகலாவிடம் சென்று சரமாரியாக சண்டை போடுகிறாள். ஆனால், சந்திரகலா எனக்கு எதுவுமே தெரியாது நான் எதுவுமே செய்ய வில்லை என நாடகமாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











