சந்திரகலா உடம்பில் மோகினி பிசாசு? கோவிலில் காத்திருக்கும் சாட்டையடி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோல், ரேவதி கார்த்திக்காக வாங்கி வைத்து இருந்த கிப்ட் உடைந்து விடுகிறாள் சந்திரா. இதனால், ஆத்திரப்படும் ரேவதி, சந்திரகலாவிடம் சென்று சரமாரியாக சண்டை போடுகிறாள். உடனே சந்திரா இன்னும் ஆறு மாதத்தில் விவாகரத்து நடக்கப்போகிறது அதற்குள் எதற்கு கிப்ட் தரவேண்டும் என சொல்ல ரேவதி உடைந்து அழுகிறாள். இதையடுத்து , வீட்டில் இருக்கும் அனைவரும், சந்திரகலாவை பேயை வைத்து பயம் காட்ட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், மயில்வாகனம்,சத்தம் போட்டு சந்திரகலாவுக்கு பயம் காட்ட அவள் சாமுண்டீஸ்வரியிடம் விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி எனக்கு ஒன்னும் சவுண்ட் கேட்கலையே என்று சொல்லி அனுப்புகிறாள். இதனால் பயத்தோடு சந்திரகலா தனது அறைக்கு சென்று படுக்கிறாள். அடுத்த நாள் காலையில் மீனாட்சி பால் கொண்டு வந்து கொடுக்க அதைப்பார்த்த சந்திரகலா என்னடி பால் கெட்ட, பீட்ரூட் ஜூஸ் கொடுக்குற என்கிற என்கிறாள். அப்போது, அங்கு வரும் ரோகிணி, என்ன சித்தி கண்ணு தெரியலையா...இது பால் தான் என்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: ரோகிணி சொல்வதை நம்பாத சந்திரகலா வீட்டில் இருப்பவர்களிடம் காட்ட எல்லாரும் பால் வெள்ளையாக தானே இருக்கு என்று சொல்கின்றனர். இதையடுத்து குளிக்க சென்று குழாயை திறக்க தண்ணீரும் சிவப்பு நிறத்தில் வர பயம் கொள்கிறாள். அடுத்து ஒரு கொரியர் வர அதில், நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகலானா செத்து போய்டுவ என்று எழுதி இருக்க மேலும் அதிர்ச்சி அடைகிறாள். அந்த பேப்பரை, சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் காட்டி அக்க வெறும் வெள்ளை தாளாக இருக்க மேலும் ஷாக் ஆகிறாள். தொடர்ந்து சந்திரகலா ரூமில் விஷம், தூக்கு கயிறு ஆகியவை இருக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். சைக்கலாஜி டாக்டராக மயில்வாகனம் மாறுவேடத்தில் வருகிறான்.

மோகினி பேய்: இதை மருந்து மூலமாக குணப்படுத்த முடியாது.. ஆன்மீக முறையில் குணப்படுத்த பாருங்க என்று சொல்ல ராஜராஜன் ஒரு கோவிலை சொல்கிறார். பிறகு சந்திரகலாவை அந்த கோவிலுக்கு அழைத்து வர இப்பொது மயில்வாகனம் சாமியார் வேடத்தில் வருகிறான். சந்திரகலா உடம்பில் மோகினி இறங்கி இருக்கு.. ரத்த பந்தம் கொண்டவங்க சாட்டையால் அடிச்சா தான் சரியாகும் என்று சொல்ல சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X