ரேவதிக்கு மீண்டும் கல்யாணம்? புது மாப்பிள்ளையை கொண்டுவரும் சந்திரகலா.. கார்த்திகை தீபம்!
சென்னை: டாக்டர் வேஷத்தில் இருக்கும் மயில்வாகனம், இந்த பேயை குணப்படுத்த வேண்டும் என்றால், ரத்த பந்தம் சாட்டையால் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறான். இதையடுத்து, சாமியார் வேஷத்தில் வரும் மயில்வாகன், இன்னும் பேய் போகவில்லை, கோவிலில் கட்டிவைத்து அடித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்ல, ராஜராஜன் ஒரு கோவிலை சொல்கிறார். பிறகு சந்திரகலாவை அந்த கோவிலுக்கு அழைத்து வர சாமியார் வேஷத்தில் இருக்கும் மயில்வாகனம் சந்திரகாவை அடி அடி என அடிக்கிறார்.
இதனையடுத்து இரவு முழுவதும் சந்திரகலாவை கோவிலில் கட்டி வைக்க வேண்டும் என்று சொல்லி விட எல்லாரும் கிளம்பி சந்திரகலாவை கோவிலில் கட்டி வைக்கின்றனர். அப்போது, கார்த்திக், இது எல்லாம் நாங்க ஏன் செய்றோம் தெரியுமா? ஒழுங்கா உங்க புருஷன் சிவனாண்டிடி கூட போய் வாழுறேன். இனிமேலும், அக்கா குடும்பத்தை கொடுப்பேன் என்று சொல்லிட்டு இருக்காதீங்க, நீங்க சிவனாண்டி கூட போகிற வரைக்கும் நாங்க, பிரச்சனை கொடுத்துக்கிட்டே தான் இருப்போம் என்று சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சந்திரகலா இருக்க, அந்த நேரம் சிவனாண்டி வருகிறான். சிவனாண்டி சந்திரகலாவின் நிலைமையை பார்த்து வருத்தப்பட்டு, அவங்க ஏதோ ஒரு முடிவோட இருக்காங்க. இதனால், நீ என் கூட போய்விடுகிறேன் என்று சொல், அடுத்து நடப்பதைபார்த்துக்கொள்ளலாம் என்கிறான். சிவனாண்டி சொன்னது போலவே கார்த்திக், ரேவதி, மயில்வாகனம் என அனைவரையும் அழைத்து, இதற்கு மேல் நான், என் அக்காவீட்டிற்கு எந்தவிதமான தொலையும் தர மாட்டேன் என சொல்கிறாள் சந்திரகலா. இப்படி சொல்லியதை கேட்ட கார்த்திக், சந்திரகலா சொல்வதில் உண்மை இல்லை, அதற்கு பின் ஏதோ திட்டம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான்.
சந்திரகலாவின் திட்டம்: தன்னை இந்தநிலைமைக்கு கொண்டு போன கார்த்தி ரேவதியை சும்மா விடக்கூடாது என சந்திரகலா முடிவெடுக்கிறாள். அதை தொடர்ந்து, சாமுண்டீஸ்வரியிடம் அக்கா, ரேவதிக்கு விவகாரத்து கிடைப்பதற்குள், அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துருவிடுவது தான் சரி என்றுசொல்கிறாள். சாமுண்டீஸ்வரியும் எனக்கும் அதுதான் சரியாக தோன்றுகிறது என்று சொல்ல. ரேவதிக்காக ஒரு மாப்பிள்ளை பார்ப்பதாக சொல்லி வெளிநாட்டில் இருந்து ஒருவனை இறக்குகிறாள் சந்திரகலா. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











