ரேவதியை வட்டமிடும் புது மாப்பிள்ளை.. சாமுண்டீஸ்வரியின் பிளான்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலாவுக்கு பேய் பிடித்து இருப்பதாக சொல்லி கோவிலுக்கு அழைத்து சென்று சாட்டையால் அடி அடி என அடிக்கிறார்கள். பின் கார்த்திக், இதெல்லாம் நாங்க ஏன் பண்றோம் தெரியுமா? நீ ஒழுங்கா உங்களுடைய புருஷன் வீட்டுக்கு போய் சிவனாண்டி கூட வாழ வேண்டும், அத்தை சாமுண்டீஸ்வரிக்கு எந்தவிதமான தொல்லையும் கொடுக்கக்கூடாது. நீங்க போவதாக சொன்னால் இத்தோட எல்லாத்தையும் நிறுத்திவிடுவோம் என்று சொல்கிறான். சந்திரகலாவும் சாட்டை அடிக்கு பயந்து நான் சிவனாண்டி வீட்டுக்கு போவதாக சொல்கிறாள்.
இன்றைய எபிசோடில் கார்த்திக், சந்திரகலாவிடம் எப்போது உங்க வீட்டுக்கு போறீங்க என்று கேட்க, நான் ஏன் போகணும். இது என்னோட அக்கா வீடு, இந்த வீட்டில் தான் இருப்பேன். நான் இந்த வீட்டை விட்டு போயிட்டா அக்காவை சீக்கிரமா அழிச்சி விடலாம் என்று நீ பிளான் போடுற, அதை நான் ஒரு நாளும் நடக்க விடமாட்டேன். என் புருஷனையே விட்டுட்டு இந்த வீட்ல இருப்பதற்கு அக்கா மேல நான் வச்சி இருக்கும் பாசம் தான் காரணம். உன்னோட திட்டம் என்னைக்குமே நடக்காது என்கிறாள். அப்போது கார்த்திக், நீங்க என்னைக்கு சொன்னதை செய்து இருக்கீங்க, என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

கார்த்திகை தீபம்: இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை வெளியில் இருக்கும் சாமுண்டீஸ்வரி கேட்டு விடுகிறாள். இதற்கு எல்லாம் காரணம், இந்த டிரைவர் தானா? இது எல்லாம் தெரியாம நாம சந்திரகலாவை அடிச்சிட்டோமே என்று வருத்தப்படுகிறாள். இதுக்கு மேலும், இந்த டிரைவரை சும்மாவிடக்கூடாது. இவனை அடக்குவதற்கு சரியான ஆள் அவன் தான் அவன் வந்தா, இந்த டிரைவரை ஓட விடுவான் என திட்டம் போட்டு வெளிநாட்டில் இருக்கும் ஜாக்கை வர சொல்கிறாள்.
சாமுண்டீஸ்வரியின் திட்டம்: இதையடுத்து, வெளிநாட்டில் இருந்து ஜாக் வந்து இருக்க, அவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் சமுண்டீஸ்வரி, இவர் தான் ரேவதியை திருமணம் செய்து கொள்ள போகிறார். இன்னும் ஆறு மாசத்துல கார்த்திக், ரேவதி ரெண்டு பேருக்கும் விவகாரத்து கிடைத்துவிடும். அதன் பிறகு ஜாக், ரேவதி கல்யாணம் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போய்டுவார் என்று சொல்கிறாள். இதை கேட்டு, கார்த்தி, ரேவதி, மயில்வாகனம் என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, ஜாக் கார்த்தியிடம் கை கொடுத்த கார்த்திக், ஜாக்கின் கையை பிடித்து அழுத்துகிறார். இதனால் வலி தாங்காமல் ஜாக் கத்துகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











