சாமுண்டீஸ்வரி கதை முடிந்தது.. காளியம்மாவின் பிளான்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக், ரேவதியை பிரிக்க திட்டம் போடும் சாமுண்டீஸ்வரி வெளிநாட்டில் இருந்து ஜாக் என்பவரை வரவைக்கிறார். அவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் சமுண்டீஸ்வரி, இவர் தான் ரேவதியை திருமணம் செய்து கொள்ள போகிறார். இன்னும் ஆறு மாசத்துல கார்த்திக், ரேவதி ரெண்டு பேருக்கும் விவகாரத்து கிடைத்துவிடும். அதன் பிறகு ஜாக், ரேவதி கல்யாணம் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போய்டுவார் என்று சொல்கிறாள். இதை கேட்டு, கார்த்தி, ரேவதி, மயில்வாகனம் என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதன்பின் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, ஜாக், ரேவதியை அழைத்து நீ தான் எனக்கு உணவு பரிமாற வேண்டும் என சொல்கிறான். இதைக்கேட்டு ரேவதி முடியாது என்று சொல்ல, அப்போது சந்திரகலா, ஜாக் தான் இந்த வீட்டின் மாப்பிள்ளை இன்னும் ஆறு மாதத்தில் உனக்கு விவகாரத்து நடக்கப்போகிறது, நீ ஜாக் கூடத்தான் வாழ போற என்பதை மறந்துவிடாதே என்று சொல்லி, ஜாக்கிற்கு உணவு பரிமாற சொல்கிறாள். இதனால், ஆத்திரத்தோடு இருக்கும் ரேவதி, சாப்பாட்டில் அதிகமான காரத்தை போட்டு ஜாக்கை பழிவாங்குகிறார். அந்த சாப்பாட்டை எப்படியோ சமாளித்து ஜாக் சாப்பிட்டுவிடுகிறான். பின் ரேவதியிடம் இதுக்கு மேல இப்படி செய்யாதே என் உடம்பு தாங்காது என்று சொல்ல, ஆத்திரப்படும் ரேவதி அப்படித்தான் டா பண்ணுவேன் ஒழுங்க வீட்டை விட்டு ஒடி விடு என்கிறாள்.

காளியம்மாவின் பிளான்: இதையடுத்து, பேங்கில் இருந்து வந்த ஆட்கள் சொன்னது உண்மை என நம்பி ஊர்மக்களை அழைத்து சாமுண்டீஸ்வரி, இந்த பேங்கில் அனைவரும் உங்களிடம் இருக்கும் நகையை வைத்து பத்திரம் வாங்கினால், கூடுதலாக பணம் கிடைக்கும் என்று சொல்ல, அனைவரும் சாமுண்டீஸ்வரி பேச்சை கேட்டு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த விஷயத்தை சிவனாண்டி, காளியம்மாளிடம் சொல்லி சந்தோஷப்பட, இந்த விஷயத்தோடு சாமுண்டீஸ்வரி எல்லாத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்க போகிறாள், அதை நம்ம பார்க்கப்போகிறோம் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்,


Click it and Unblock the Notifications











