சதியில் சிக்கும் சாமுண்டீஸ்வரி.. சந்தேகத்தில் கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: பைனஸ் நிறுவனத்தில் இருந்து வந்த ஆட்கள் சொன்னது உண்மை என நம்பி ஊர்மக்களை அழைத்து சாமுண்டீஸ்வரி, இந்த பேங்கில் அனைவரும் உங்களிடம் இருக்கும் நகையை வைத்து பத்திரம் வாங்கினால், கூடுதலாக பணம் கிடைக்கும் என்று சொல்ல, அனைவரும் சாமுண்டீஸ்வரி பேச்சை கேட்டு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த விஷயத்தை சிவனாண்டி, காளியம்மாளிடம் சொல்லி சந்தோஷப்பட, இந்த விஷயத்தோடு சாமுண்டீஸ்வரி எல்லாத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்க போகிறாள், அதை நம்ம பார்க்கப்போகிறோம் என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்,
இதையடுத்து, கார்த்திக்கு இவர்கள் மீது சந்தேகம் உருவாகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சரணிடம் என்னுடைய நகையை ட்ராக்கர் வச்சு கொடுக்கிறேன். இதை நீங்க அவங்க கிட்ட கொடுங்க. இவர்கள் தப்பிச்சு ஓடுனா கூட அந்த ட்ராக்கர் வச்சு கண்டுபிடிச்சிடலாம் என்று சொல்கிறான். கார்த்திக் சொன்ன திட்டத்தின் படி, நகையும் வைக்கப்படுகிறது.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் ஜாக், வீட்டில் எனக்கு சுடு தண்ணி வேண்டும் என்று ரேவதியிடம் கேட்டு தொல்லை செய்கிறான். இதனால், ஆத்திரப்படும் ரேவதி, இவ்வளவு செய்தும் மறுபடியும் நீ என்கிட்ட சுடு தண்ணீர் கேட்குறியா உன்னை சும்மாவிட மாட்டேன். இதோடு நீ என்கிட்ட எதையும் கேட்கக்கூடாது என்று கொதிக்கும் தண்ணீரை பாத்ரூமில் கொண்டு போய் வைத்துவிடுகிறாள். அதை எடுத்து குளித்த ஜாக் சூடு தாங்காமல் தவிக்கிறான். ஆனால், இது ரேவதிக்கு தெரிந்தால், மானம் போய்விடும் என தெரியாதது போல சமாளிக்கிறான். இதைப்பார்த்த கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் சேர்ந்து ஜாக்கை கேலி செய்து சிரிக்கின்றனர்.
கார்த்திக்கின் பிளான்: அடுத்த நாள் அந்த நகை பிசினஸ் குறித்து கடை திறப்பு விழா நடக்க சாமுண்டீஸ்வரி அந்த ஆபீஸ் திறந்து வைத்து அவர்களுக்கு சப்போர்ட் செய்ய மக்கள் எல்லோரும் தங்களது நகையுடன் வருகின்றனர். அந்த நகையோடு சேர்ந்து கார்த்திக் ஏற்பாடு செய்த சிப் பொருத்தப்பட்ட ட்ராக்கரும் வைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











