நகையுடன் எஸ்கேப் ஆன ஆட்கள்.. சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் சிக்கல்.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரி நகையை வைக்கும் ஆபீசை திறந்து வைத்து அவர்களுக்கு சப்போர்ட் செய்ய மக்கள் எல்லோரும் தங்களது நகையுடன் வருகின்றனர். அந்த நகையோடு சேர்ந்து கார்த்திக் ஏற்பாடு செய்த சிப் பொருத்தப்பட்ட நகையும் வைக்கப்படுகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரியை நம்பி அனைவரும் நகையை பைனான்ஸ் நிறுவனத்தில் வைக்கின்றனர். இதைப்பார்த்த சந்திரகலா மிகவும் சந்தோஷத்துடன் காளியம்மாவிற்கு ஃபோன் செய்து, நாம நினைச்சபடியே எல்லாம் நடக்குது. ஊர் மக்கள் அனைவரும் நகையை வைக்கிறார்கள். இந்த விஷயத்திதோட சாமுண்டீஸ்வரி கதை முடிந்துவிட்டது என்று விஷயத்தை சொல்கிறாள்.

பின் வீட்டிற்கு வரும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம், அக்கா ஊரில் உனக்கு பெரிய மரியாதை வந்து இருக்கு. அடுத்த முறை தேர்தலில் நின்றால் நிச்சயமாக நீ தான் ஜெயிப்ப. இதுக்கு முன்னாடி டிரைவர் ராஜாவால் தான் நீ பஞ்சாயத்து தலைவரா ஆனே என்று எல்லாரும் பேசினாங்க. ஆனால், இந்த விஷயத்துக்கு அப்புறம் நீ தான் அக்கா அடுத்த எலக்சன்லயும் ஜெயிப்பா, அந்த ராஜா பெயரை எல்லாம் மறந்துவிட்டு, உன் பேர தான் சொல்றாங்க என்று ஏற்றி விடுகிறாள். மறுபக்கம் காளியம்மாள் அந்த நகை பைனான்சியர்களை வரவைத்து நகைகளை அனைத்தையும் பார்த்து விட்டு. இனிமே இந்த ஊரில் நீங்கள் இருக்கக்கூடாது நகையே ஒரு இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு அனைவரும் எங்காவது சென்று விடுங்கள் என சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அடுத்த நாள் காலை, ஊர் மக்கள் இன்னும் கொஞ்சம் பேர் நகைகளை அலுவலகத்தில் கொடுக்கலாம் என வர அலுவலகத்தில் தலையும் தெரியாமல் எல்லோரும் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்சி அடைகின்றனர். நகைகளை பறிகொடுத்த அதிர்ச்சியில் சாமுண்டீஸ்வரியை சந்தித்து, அம்மா நாம ஏமாத்துவிட்டோம். அந்த பைசன்சியர் கடையை இழுத்து மூடிவிட்டு நகையோடு ஓடிவிட்டான் என்று கதறுகின்றனர். இதனால், என்ன செய்வது என்றுதெரியாமல் சாமுண்டீஸ்வரி தவிக்கிறாள். ஊர் மக்கள் அனைவரும், உங்களை நம்பி தான் நகையை கொடுத்தோம்.ஆனால், இப்போது என்ன செய்ய என அழுகின்றனர். உடனே, சாமுண்டீஸ்வரி என் சொத்து மொத்தத்தையும் விற்றாவது உங்களுக்கு கொடுக்க வேண்டிய நகை நான் தருகிறேன் என்கிறார்.

தலைகுனிந்து நின்ற சாமுண்ஸ்வரி: உடனே ராஜராஜன் என்ன சாமுண்டீஸ்வரி இப்படி சொல்லிட்ட, இன்னைக்கு தங்கம் விற்கும் விலைக்கு நாம சொத்தை விற்று கொடுத்தாலும் கொடுக்க முடியாது, என்றுசொல்ல, வேற என்ன செய்வது, ஊர் மக்கள் என்னை நம்பி நகையை கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும் என சொல்கிறாள். அதன்பின், கார்த்திக் ஏற்கனே நகையில் வைத்துஇருந்த சிஃப்பை வைத்து, நகை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அவர்களை அந்த இடத்திற்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X