அடுத்து அரங்கேற போகும் சூழ்ச்சி.. கார்த்திக் தப்பிக்க போவது எப்படி? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், முத்துவேல் லேடி கெட்டப்பில் இருக்கும் மயில்வாகனத்தை பொண்ணு என நம்பி வீட்டிற்கு அழைத்து செல்கிறான், எனக்கு தங்க நகைகள் வேண்டும் என்று சொல்ல முத்துவேல் கோவில் நகைகள் கூட இங்க தான் இருக்கு என்று எடுத்து காட்டுகிறான். பிறகு தண்ணீர் கேக்க முத்துவேல் உள்ளே செல்ல மயில்வாகனம் கார்த்திக்கு ஃபோன் நகைகள் இங்கு தான் இருக்கு என்கிற விஷயத்தை சொல்கிறான். இதனை தொடர்ந்து முத்துவேல் மயில்வாகனத்தை ரூமுக்கு அழைத்து செல்கிறான். கார்த்திக் சுவர் ஏறி குதித்து உள்ளே வர முத்துவேல் அசந்த நேரத்தில் மயில்வாகனம் நகைகளை மாற்றி வைக்கிறான்.
பிறகு ரூமுக்குள் சென்று லைட் ஆப் செய்ததும் மயில்வாகனம் முத்துவேலை அடித்து துவைத்து எஸ்கேப் ஆகிறான், முத்துவேல் நகைகள் இருப்பதை பார்த்து நல்லவேளை நகைகள் அப்படியே இருக்கு என்று நிம்மதி அடைய, கோவிலுக்கு வரும் கார்த்திக் அந்த நகைகளை மாற்றி வைக்கிறான்.பின் சாமியாரிடம் விஷயத்தை சொல்கிறார். உடனே சாமியாடி சாமி வருவது போல சாமி ஆடுகிறார். என் பக்தை சிறையில் இருக்கிறாள் அவளுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. மீண்டும் நகை பறிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல ஊர் மக்களும் சாமியே சொல்லிவிட்டது என மீண்டும், நகை பரிசோதகரை வர வைத்த பரிசோதனை செய்ய அது உண்மையான நகை என்பது தெரியவருகிறது. இதையடுத்து, சாமுண்டீஸ்வரி மீண்டும் கோவிலுக்கு வருகிறாள்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், கோவில் நிகழ்ச்சியில் பரிவட்டம் யாருக்கு கட்டுவது என்ற போட்டி எழ ஒரு போட்டி வைத்து அதில் ஜெயிப்பவர்களுக்கு பரிவட்டம் கட்டலாம் என முடிவெடுக்கின்றனர். சந்திரகலா காளியம்மாவுக்கு விஷயத்தை தெரியப்படுத்த அவள் சிறப்பா செஞ்சிடலாம் என்று திட்டமிடுகிறாள். அதன் பிறகு ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம் உங்கள காப்பாற்றியது கார்த்திக் தான் என்ற உண்மையை உடைக்கிறாள். சந்திரகலா, அக்கா நான் சொன்ன போது நீ நம்பவில்லை, அவனே நகைய திருடி, அந்த பழியை உன் மீது போட்டுவிட்டு, அவனே கண்டுபிடிக்கிற மாதிரி கண்டுபிடிச்சு உன்னை காப்பாத்தி உன்கிட்ட நல்ல பெயர் எடுக்க பார்க்கிறான் என கோர்த்து விடுகிறாள்.
அடுத்த சூழ்ச்சி: இதை கேட்டு ஆத்திரப்படும் ரேவதி, இந்த மாதிரி எண்ணம் எல்லாம் உங்களுக்குத்தான் வரும், என் புருஷனுக்கு வராது, வேணும் என்றால், சிசிடிவி காட்சிகளை பாருங்க என்று சொல்ல சந்திரகலா ஷாக் ஆகிறாள். சிசிடிவியை பார்த்தாம் நாம மாட்டிக்கொள்வோம் என பயப்படுகிறாள். அதன் பிறகு காளியம்மாவின் ஆட்கள் இந்த முறை சாமுண்டீஸ்வரியை எப்படியாவது பழி தீர்க்கணும் என திட்டமிட்டு கார்த்திக் ரூமில் 10 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து இன்கம் டாக்ஸ்க்கு தகவல் கொடுத்து விடலாம் என முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











