பஞ்சாயத்தில் சாமுண்டீஸ்வரி.. கார்த்திக் காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம்!

சென்னை: பஞ்சாயத்தை கூட்டிய சாமுண்டீஸ்வரி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்காக தனது சொத்துக்களை கொடுப்பதாக சொல்லி வாக்கு கொடுக்க குடும்பத்தினர் கொஞ்சம் யோசிக்கலாம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். இந்த சமயத்தில் கார்த்திக், அத்தை அதெல்லாம் தேவையே இல்லை அவங்க கிட்ட கொடுத்த நகைல நான் ட்ராக்கர் வச்சிருக்கேன் அதனால அவங்கள ஈசியா கண்டுபிடிச்சு நகைகளை மீட்டு விடலாம் என்று சொல்கிறான். இதை தொடர்ந்து கார்த்திக் பல்வேறு இடங்களில் அலைகிறான். ஆனால், நகை இருக்கும் இடம் தெரியாமல் போகிறது. இதனால், சந்திரகலா, அக்கா இவன் எல்லாம் ஒரு ஆளு அவனை நம்பிக்கிட்டு இருந்தியே என்று சொல்ல, கோவத்துடன் செல்லும் சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவிடம் இந்த பத்திரத்தை விற்றாவது பணத்துடன் வா என்று சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

நகையை கொள்ளையடித்தவர்களை பிடிக்க முடியாததால், கார்த்திக் ஒரு திட்டத்தை போடுகிறார். அதாவது, அவர்களால் இப்போதைக்கு அந்த நகையை விற்க முடியாது. இதனால், அவர்கள் செய்தது போல, நாமும் திட்டத்தை போடுவோம் என் லட்சுமி பைனான்ஸ் என்கிற பெயரில், ஒரு திட்டத்தை போட்டு நோட்டீஸ் அடித்து அனைவரிடமும் கொடுக்கின்றனர். இது நகையை கொள்ளையடித்தவர்களில் கையில் சிக்க, அவர்கள் நம்மிடம் இருப்பது திருட்டு நகை இதை யாரிடமாவது விற்றால் பாதி பணம் தான் தருவார்கள். அந்த பணத்தில் காளியம்மாளுக்கு பங்குவேற தரவேண்டும். இவர்களிடம் விற்றால், சரவனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகமாக கிடைக்கும் என்று சொல்கின்றனர். அப்போது, ஒருவன் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்று சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: நான் முதலில், ஒரே ஒரு நகையை எடுத்து சென்று அவர்கள் யார் என்ன என்று விசாரித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரே ஒரு நகை மட்டும் எடுத்து விற்கிறான். விற்க வந்தவரை கார்த்திக், மயில்வாகனம் மாறுவேடத்தில் சென்று கவனிக்கின்றனர். ஒரிஜினல் நகை தான் என்று தெரிந்ததும் மற்ற நகைகளை கொண்டு வர சொல்கின்றனர், அந்த நபர்களும் மற்ற நகைகளை கொண்டு வர செல்கின்றனர். மறுபக்கம் சாமுண்டீஸ்வரி நகையை இழந்தவர்களுக்கு பஞ்சாயத்தை கூட்டி தனது சொத்தை கொடுக்க தயாராக சேட்டு பஞ்சாயத்தை நோக்கி பணத்துடன் வந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ரவுடிகள் நகையை எடுத்து கொண்டு வர போலீஸ் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X