கூட இருந்தே குழி பறிக்கும் சந்திரகலா.. உண்மையை தெரிந்து கொண்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தில் அனைத்து சொத்துக்களையும் சேட்டில் விற்று விட முடிவு செய்கிறாள். அந்த நேரத்தில் அங்கு வரும் காளியம்மாள், அது எப்படி பொதுமக்களில் நகைகள் எல்லாம் காணாமல் போகும். இதற்கு பின்னால் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என சொல்ல, ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி தேவையில்லாமல் எதைப்பற்றியும் பேச வேண்டாம். நீ எப்படிப்பட்டவர் என்று இந்த ஊரில் இருக்கும் அனைவருக்குமே தெரியும். ஊர் மக்கள் என்னை நம்புகிறார்கள் அவர்களுக்கு நான் நிச்சயம் என்னுடைய சொத்துக்களை விற்று உரிய பணத்தை தருவேன் என சொல்கிறாள்.
அந்த நேரத்தில் கார்த்திக், நகைகளை கொள்ளை அடித்தவர்களுடன் பஞ்சாயத்திற்கு வருகிறார். அவர்களை பார்த்து ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி கடுமையாக அடிக்கிறாள். அடிதாங்க முடியாத அவர்கள், காளியம்மாள் தான் இப்படி செய்ய சொன்னாங்க, எங்களுக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்கிறான். இதையடுத்து ஊர் மக்கள், இதற்கு மேல் காளியம்மாளையும், சிவனாண்டியையும் சும்மா விடக்கூடாது. அவர்களால் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முன் திருவிழாவில் குண்டு வைக்க பார்த்தார்கள், இப்போது பொதுமக்கள் நகையை கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இவர்களை இப்படியே விட்டால், இந்த ஊரை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என அனைவரும் காளியம்மாள் வீட்டிற்கு செல்கின்றனர். இதை தெரிந்து கொண்ட காளியம்மாள் மற்றும் சிவனாண்டி இருவரும் அங்கிருந்து தப்பித்து விடுகின்றனர்.

கார்த்திகை தீபம்: சொத்துக்களை காப்பாற்றிய கார்த்திக் மீது சாமுண்டீஸ்வரிக்கு நல்ல விதமான எண்ணம் தோன்றுகிறது. இதைப் பார்த்து ஆத்திரப்படும் சந்திரகலா, இது எல்லாம் அந்த டிரைவர் ராஜாவோட வேலையாத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். அவனே ஆட்களை அனுப்பி நகைகளை எல்லாரும் கொள்ளை அடிக்க வைத்துவிட்டு, அவனே நகையை கண்டுபிடித்தது போல நாடாகமாடுகிறான். இவனை சும்மா விடக்கூடாது அக்கா என சொல்கிறாள். ஆனால், சாமுண்டீஸ்வரிக்கு கார்த்திக் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வந்துவிடுகிறது. கார்த்திக் நமக்கு நல்லது தான் செய்து இருக்கிறார். ஆனால், வீட்டில் நமக்கு யாரோ சதி செய்கிறார்கள் என்பது என தெரிந்து கொள்ளும் சாமுண்டீஸ்வரிக்கு சந்திரகலா மீது சந்தேகம் வர அனைத்து விஷயத்தை நினைத்துப்பார்த்து சந்திரகலா தான் துரோகி என்பதை தெரிந்து அவளை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவதை பார்க்கலாம்,.


Click it and Unblock the Notifications











