கணவருடன் கூடி கும்மாளமடித்த சந்திரகலா.. சாமுண்டீஸ்வரியிடம் சிக்கவைத்த கார்த்திக்.. கார்த்திகை தீபம்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டீஸ்வரிடம் கார்த்திக் தான் நகையை திருடி உன்னை ஜெயிலுக்கு அனுப்பி உன்னை காப்பாற்றுவது போல காப்பாற்றி இருக்கணும் அவனை நம்பாதே என ஏற்றி விட ரேவதி உங்களுக்கு சந்தேகம் இருந்தா சிசிடிவி காட்சிகளை பாருங்கள் என்று சொல்லி விடுகிறாள்.

அதன் பிறகு சாமுண்டீஸ்வரி சிசிடிவி காட்சிகளை பார்க்க கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஏதோ பேசிக்கொள்வது தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து பரிவட்டம் யாருக்கு என்ற பேச்சு வர சிலம்பாட்டம் போட்டியில் ஜெயிக்கும் தரப்பினருக்கு பரிவட்டம் என முடிவு செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து காளியம்மா சிலம்பாட்டத்தில் ஒருவனை களமிறக்க மறுப்பக்கம் சாமுண்டீஸ்வரி தனது தரப்பிலிருந்து ஒருவனை போட்டிக்கு அனுப்புகிறாள். எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரி தரப்பில் தோல்வியை தழுவும் நிலையில் இருக்க கார்த்திக் களத்தில் இறங்கி சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரியின் கௌரவத்தை எப்படி காப்பாற்றுகிறார்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்று கார்த்திகை தீபம் சண்டே ஸ்பெஷல் எபிசோடை இன்று மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அதாவது, சிவனாண்டி, காளியம்மாளிடம் இந்த பொங்கலுக்கு சந்திரகலா நம்ம வீட்டில் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஆசையை சொல்கிறார். இதையடுத்து, காளியம்மாள் சந்திராவிற்கு ஃபோன் செய்து, இந்த பொங்கலுக்கு நீ நம்ம வீட்டில் பொங்கல் வைக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என சொல்கிறாள். இதை கேட்டு சந்திரகலாவும் நிச்சயமாக வருகிறேன் என்று சொல்கிறாள். இதை மயில்வாகனம் ஒட்டு கேட்டுவிட்டு, கார்த்திக்கிடம் சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

வசமாக மாட்டிக்கொண்ட சந்திரா: இதை வைத்து திட்டம் போடும் கார்த்திக், சந்திரகலா இன்னும் அந்த குடும்பத்துடன் எப்படி ஒட்டி உறவாடுகிறார்கள் என்பதை நிரூபிக்க இதுதான் சரியான நேரம் என்று மயில்வாகனத்திடம் ஒரு திட்டத்தை சொல்கிறாள். கார்த்திக் சொல்வதை போல, மயில்வாகனம் சந்திர கலாவிடம் சென்று சந்திரகலா அத்தையை காலையில் இருந்து காணவில்லை, பல இடங்களில் நான் தேடி விட்டேன் எனக்கு என்னமோ சிவனாண்டி மேல் தான் சந்தேகமாக இருக்கிறது. அவர் தான் கடத்தி இருப்பார் என்ற பயம் வருகிறது என்று சொல்ல ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சிவனாண்டி வீட்டிற்கு செல்கிறாள். ஆனால், வீட்டில் சந்திரகலா சிவனாண்டி வீட்டு வாசலில் அனைவரிடத்திலும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு பொங்கல் வைப்பதை பார்த்துவிட்டு சாமுண்டீஸ்வரி ஆத்திரத்தோடு கத்துகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X