ஏமாந்து போன அதிகாரிகள்.. காளியம்மாவுக்கு காத்திருக்கும் ஷாக்... கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் காளியம்மா சிலம்பாட்டத்தில் ஒருவனை களமிறக்க மறுப்பக்கம் சாமுண்டீஸ்வரி தனது தரப்பிலிருந்து ஒருவனை போட்டிக்கு அனுப்புகிறாள். எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரி தரப்பில் தோல்வியை தழுவும் நிலையில் இருக்க கார்த்திக் களத்தில் இறங்கி சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரியின் கௌரவத்தை காப்பாற்றுகிறார்.
இதையடுத்து இன்றைய எபிசோடில் சிலம்பாட்ட போட்டியில் அடி வாங்கியவனுக்கு ஒத்தடம் கொடுத்து ஆறுதல் சொல்கிறாள் காளியம்மா. அந்த சாமுண்டீஸ்வரி மற்றும் கார்த்தியை இப்படியே விடக்கூடாது, பெருசா ஏதாவது பண்ணனும் என யோசிக்கின்றனர். இதையடுத்து, காளியம்மா ஒரு திட்டத்தை போட்டு, அதை சந்திரகலாவிடம் சொல்கிறாள். நான் சொல்லும் ஆளு ஒருத்தன் உன்னை தேடி வந்து மஞ்ச பையை தருவான், அந்த பையை சாமுண்டீஸ்வரி ரூம்ல வைத்துவிடு, நான் வருமான வரித்துறைக்கு போன் செய்து, விஷயத்தை சொல்றேன் அவங்க ரெய்டு வருவாங்க. அப்போ, சாமுண்டீஸ்வரி வசமா மாட்டிப்பா என்று சொல்கிறாள். இதைக்கேட்ட சந்திராவும் சாமுண்டீஸ்வரி அறையில் மஞ்சள் பையை கொண்டு வந்து வைக்கிறாள்.

கார்த்திகை தீபம்: சந்திரகலாவின் நடவடிக்கையை பார்த்து சந்தேகம் அடைந்த மயில்வாகனம், விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்கிறான். அப்போது கார்த்தி, சின்ன அத்த எந்த திட்டமும் இல்லாம அத்தையோட ரூமுக்குள் போக மாட்டாங்க. இதனால ரோகிணி அனுப்பி சந்திரகலா அத்தை என்ன செய்யறாங்க என்று கண்காணிக்க சொல் என்கிறான். அதன்படி ரோகினியும் சந்திரகலாவை கண்காணித்து, அம்மாவின் அறையில் மஞ்சள் பை ஒன்றை சந்திரகலா வைத்ததாக சொல்கிறாள். இதைதெரிந்து கொண்ட கார்த்தி, சந்திரகலா வெளியே வந்ததும் அந்த பையை நைசாக மறைத்து வைத்து விடுகிறான்.
காளியம்மாள் அதிர்ச்சி: சொல்லி வைத்தாதது போல வருமானத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்து, சோதனை செய்ய வேண்டும் என சொல்கின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரி, இதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். எதற்காக சோதனை செய்ய வேண்டும், அனைத்து கணக்கு வழக்குகளும் என்னிடம் சரியாக இருக்கிறது என வாக்குவாதம் செய்கிறாள். அப்போது கார்த்திக், அவங்க அவர்களின் வேலையை செய்ய விடுங்க, நாம்தான் அனைத்து கணக்குகளும் சரியாக வைத்து இருக்கிறோமே என்று சொல்கிறான். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். வீட்டில் எல்லா கணக்கும் சரியாக இருக்க இந்த முறையும் பொய்யாக வந்த போனை நம்பி நாங்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்துவிட்டோம் மன்னித்து விடுங்கள் என மன்னிப்பு கேட்கின்றனர். அந்த விஷயத்தை சந்திரகலா காளியம்மாளிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











