கல்யாண போட்டோவை கொளுத்திய சந்திரகலா.. பதறி ஓடிய ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: காளியம்மாள் வருமானவத்துறைக்கு ஃபோன் செய்து, சாமுண்டீஸ்வரி வேலைக்கு வாங்கித் தருவதாக பொய் சொல்லி பணத்தை வாங்கி இருப்பதாக சொல்கிறார். இதையடுத்து வருமானத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்து, சோதனை செய்ய வேண்டும் என சொல்கின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரி, இதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். எதற்காக சோதனை செய்ய வேண்டும், அனைத்து கணக்கு வழக்குகளும் என்னிடம் சரியாக இருக்கிறது என வாக்குவாதம் செய்கிறாள். அப்போது கார்த்திக், அவங்க அவர்களின் வேலையை செய்ய விடுங்க, நாம்தான் அனைத்து கணக்குகளும் சரியாக வைத்து இருக்கிறோமே என்று சொல்கிறான்.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். வீட்டில் எல்லா கணக்கும் சரியாக இருக்க இந்த முறையும் பொய்யாக வந்த போனை நம்பி நாங்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்துவிட்டோம் மன்னித்து விடுங்கள் என மன்னிப்பு கேட்கின்றனர். இதையடுத்து, சாமுண்டீஸ்வரி, என்ன சந்திரா வீட்டில் என்ன நடக்குது, அந்த பையை யார் வீட்டிற்கு கொண்டுவந்தது என்று கேட்கிறாள். அப்போது, கார்த்தி வேற யாரு சிவனாண்டி தான் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, சாமுண்டீஸ்வரி அவன் எப்படி வீட்டுக்கு வர முடியும் என்று கேட்கிறாள். அவர் வரவில்லை, அவர் கொடுத்த பையை இந்த வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்தது உங்க தங்கை தான் என்று உண்மையை சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதைக்கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, என் தங்கை மீது தேவையில்லாமல் புகார் சொல்லக்கூடாது, ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கும் அவளுக்கும் பிரச்சனை அதனால் தான் அவள் மீது தேவையில்லாமல் பழி போடுகிறீர்கள் என்று சொல்கிறாள். உடனே கார்த்திக் நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை என்று பேக்ரியில் வேலை செய்யும் நிஷாவிற்கு போன் செய்து, நேற்று சந்திரகலா வந்தாங்களா, வந்து என்ன சொன்னங்க என்று கேட்க, அவர்கள் ஒரு பையை கொடுத்து வீட்டில் வைக்க சொன்னார்கள் என்ற உண்மையை சொல்கிறாள். இதைக்கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் ஆத்திரத்தோடு சந்திரகலாவை திட்டுகின்றனர்.

சந்திரகலா செய்த வேலை: அப்போது, சாமுண்டீஸ்வரி என் தங்கையை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவளுக்கு நான் அக்கா மட்டும் இல்லை அவளுக்கு நான் அம்மா, அவள் எனக்கு எந்த துரோகத்தையும் செய்யமாட்டாள் என்று சொல்ல, சந்திரகலா, அனைவரையும் கோவத்தோடு பார்த்துவிட்டு சொல்கிறாள். இதையடுத்து, அனைவரும் போகி பாண்டிகையை கொண்டாடிக்கொண்டு இருக்க, அப்போது சந்திரகலா, ரேவதி, கார்த்தியின் திருமண போட்டோவை தீயில் போட்டு கொளுத்துகிறாள். இதைப்பார்த்த, ரேவதி, பதறிப்போய் தீக்குள் கையைவிட்டு அந்த போட்டோவை எடுக்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X