சந்திரகலா செய்த துரோகம்.. உண்மை தெரிந்து மனமுடைந்த சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு அதிகாரிகள் வந்து சோதனை போட்டு எதுவும் கிடைக்கவில்லை என்று திரும்பி செல்கின்றனர். அப்போது, கார்த்திக் இது எல்லாம் உங்க தங்கையின் வேலை என்று சொல்கிறான். இதைக்கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி என் தங்கையை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவளுக்கு நான் அக்கா மட்டும் இல்லை அவளுக்கு நான் அம்மா, அவள் எனக்கு எந்த துரோகத்தையும் செய்யமாட்டாள் என்று சொல்ல, சந்திரகலா, அனைவரையும் கோவத்தோடு பார்த்துவிட்டு அங்கிருந்து சொல்கிறாள். பின், போகி பாண்டிகையை கொண்டாடிக்கொண்டு இருக்க, அப்போது சந்திரகலா, ரேவதி, கார்த்தியின் திருமண போட்டோவை தீயில் போட்டு கொளுத்துகிறாள். இதைப்பார்த்த, ரேவதி, பதறிப்போய் தீக்குள் கையைவிட்டு அந்த போட்டோவை எடுக்கிறாள்.
இன்றைய எபிசோடில், சந்திரகலாவுக்கு ஃபோன் செய்யும் காளியம்மா, நீ சிவனாண்டியுடன் பொங்கல் கொண்டாடணும், அதை நான் பார்த்து சந்தோசப்படணும் என்று சொல்லி அழைக்க சந்திரகலா கிளம்பி செல்ல இதை மயில்வாகனம் ஒட்டு கேட்டு விடுகிறாள். இதையடுத்து மயில்வாகனம் கார்த்தியிடம் தகவலை சொல்ல கார்த்திக் ஒரு திட்டத்தை சொல்கிறான், அடுத்து மயில்வாகனம் காலையில் இருந்து உங்க தங்கச்சியை காணவில்லை, அந்த சிவனாண்டி கடத்தி இருப்பானோ என்று சந்தேகமாக இருப்பதாக சொல்கிறான். இதனால் சாமுண்டீஸ்வரி கோபப்பட்டு துப்பாக்கியை தூக்கி கொண்டு கிளம்புகிறாள். கார்த்திக் அங்கு வர அவனை கார் எடுக்க சொல்கிறாள், பின் மூன்று பேரும் கிளம்பி செல்கின்றனர்.

கார்த்திகை தீபம்: வீட்டில், சந்திரகலா அனைவருடன் சேர்ந்து சந்தோஷமாக பொங்கல் வைத்துக்கொண்டு இருக்க, அப்போது சிவனாண்டி, நாம இரண்டு பேரும் சேர்ந்து இந்த வீட்டில் பொங்கலை கொண்டாடுவதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்கிறான். அப்போது சந்திரா எனக்கும் தாங்க, எல்லா விசேஷத்திலும் அக்கா கூட இருந்து விட்டேன், இப்போ இங்கே இருப்பதை நினைக்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு என்று சொல்லி அனைவரும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து கார் வந்து நிற்கிறது. அதில் இருந்து கார்த்திக் மாஸாக இறங்கி வர, பின்னாடி சாமுண்டீஸ்வரி துப்பாக்கியுடன் வந்து இறங்கி சந்திராவை வைத்து பார்த்து கத்துகிறாள்.
சிக்கிய சந்திரகலா: சாமுண்டீஸ்வரி பார்த்து அதிர்ச்சி அடையும் சந்திரகலா என்னை மிரட்டி இங்கு வர வைத்தார்கள் என்று சொல்ல அப்போது மயில்வாகனம், சின்ன அத்தை நடிச்சது போதும், நீங்கள் சிரித்து சிரித்து பேசிய அனைத்தையும் நாங்கள் பார்த்துவிட்டோம். இதற்கு மேல் நடிக்க வேண்டாம் என சொல்கிறான். அத்தை, இப்பயாவது சின்ன அத்தை பத்தி நல்லா புரிஞ்சுக்கோங்க, இவங்க நம்ம குடும்பத்தை கெடுக்குறதுக்காகத்தான் வீட்டுக்கு வந்திருக்காங்க. நானும், ரேவதியும் பலமுறை உங்ககிட்ட சொல்லிட்டோம் ஆனா, நீங்கதான் உங்க தங்கச்சி மேல இருக்கிற பாசத்தினால அதை கண்டுக்கவே இல்ல. இப்ப கண்கூட அவங்க என்ன செய்றாங்கனு பாத்துக்கோங்க என மயில்வாகனம் சொல்கிறான். இதனால் ஆத்திரமடையும் சாமுண்டீஸ்வரி நேராக சந்திரகலாவிடம் சென்று அவளை கன்னத்தில் அடிக்கிறாள். அப்போது சிவனாண்டி தடுத்து என்னுடைய பொண்டாட்டிய அடிக்க நீ யார் என கேட்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











