சாமுண்டீஸ்வரிக்கு அல்வா கொடுத்த சந்திரகலா.. அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி பார்த்து அதிர்ச்சி அடையும் சந்திரகலா என்னை மிரட்டி இங்கு வர வைத்தார்கள் என்று சொல்ல அப்போது மயில்வாகனம், சின்ன அத்தை நடிச்சது போதும், நீங்கள் சிரித்து சிரித்து பேசிய அனைத்தையும் நாங்கள் பார்த்துவிட்டோம். இதற்கு மேல் நடிக்க வேண்டாம் என சொல்கிறான். அத்தை, இப்பயாவது சின்ன அத்தை பத்தி நல்லா புரிஞ்சுக்கோங்க, இவங்க நம்ம குடும்பத்தை கெடுக்குறதுக்காகத்தான் வீட்டுக்கு வந்திருக்காங்க. நானும், ரேவதியும் பலமுறை உங்ககிட்ட சொல்லிட்டோம் ஆனா, நீங்கதான் உங்க தங்கச்சி மேல இருக்கிற பாசத்தினால அதை கண்டுக்கவே இல்ல. இப்ப கண்கூட அவங்க என்ன செய்றாங்கனு பாத்துக்கோங்க என மயில்வாகனம் சொல்கிறான்.

ஆனால், சாமுண்டீஸ்வரி சந்திரகலாவிடம் சென்று அவளை கன்னத்தில் அடிக்கிறாள். அப்போது, சந்திரகலா அக்கா நல்ல அடி, உன்கிட்ட சொல்லாம நான் இங்கே வந்தது தப்புத்தான். இவங்க என்னை மிரட்டி இங்க வர வெச்சாங்க இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள் அக்கா. அதற்காகத்தான் இங்கே வந்தேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, சாமுண்டீஸ்வரி சமாதானமாகி எனக்கு தெரியும் உன்னபற்றி இருந்தாலும், என்கிட்டநீ சொல்லி இருக்கலாம். இவங்க நம்பளை எதுவும் செய்ய முடியாது, நீ வா வீட்டிற்கு போகலாம் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்து செல்கிறாள்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரேவதி பொங்கல் பானைகளை எடுத்து வைத்து தயாராகிக் கொண்டிருக்க கார்த்திக் அங்கு வருகிறான். ரேவதி அவனிடம் என் பிரண்டு ஒருத்திக்கு அப்பா அம்மா இல்ல, காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளும் உங்களை பார்த்தது கிடையாது. நம்ம கல்யாணத்துக்கும் வரல அதனால அவள போய் பார்த்துட்டு வரலாம் என்று சொல்கிறாள். கார்த்திக் உங்க அம்மா உன்னை தேடுவாங்களே என்று சொல்ல அதெல்லாம் ரோகினி அக்கா பார்த்துப்பாங்க என்ற சொல்லி கார்த்திகை ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அந்த கிராமத்தில் இருக்கும் ரேவதியின் தோழி மீனாட்சி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் கார்த்திக் ரேவதியை வரவேற்கின்றனர். இங்கே சிவனாண்டி சந்திரகலாவுக்கு போன் செய்து நல்லபடியா நாம மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து விட்டோம். ஆனா இந்த பொங்கலுக்கு இந்த சாமுண்டீஸ்வரிக்கு ஏதாவது பெருசா பண்ணனும் என திட்டமிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











