தோட்டக்காரன் மண்டையை உடைத்த ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: நேற்றைய எபிசோடில், ரேவதி பொங்கல் பானைகளை எடுத்து வைத்து தயாராகிக் கொண்டிருக்க கார்த்திக் அங்கு வருகிறான். அப்போது, ரேவதி , கார்த்திக்கிடம் என் பிரண்டு ஒருத்திக்கு அப்பா அம்மா இல்ல, காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளும் உங்களை பார்த்தது கிடையாது. நம்ம கல்யாணத்துக்கும் வரல அதனால அவள போய் பார்த்துட்டு வரலாம் என்று சொல்கிறாள். கார்த்திக் உங்க அம்மா உன்னை தேடுவாங்களே என்று சொல்ல அதெல்லாம் ரோகினி அக்கா பார்த்துப்பாங்க என்ற சொல்லி கார்த்திகை ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அந்த கிராமத்தில் இருக்கும் ரேவதியின் தோழி மீனாட்சி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் கார்த்திக் ரேவதியை வரவேற்கின்றனர்.

இன்றைய எபிசோடில், ரேவதியை பார்த்த சந்தோஷத்தில் மீனாட்சி இருக்க, அப்போது, ரேவதி நீ பொங்கல் சீர் கொடுக்க யாரும் இல்லை என்று வருத்தப்பட்டல அதன் சீர் கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்தோம் என்று சொல்ல, அதைக்கேட்டு மீனாட்சி கண்கலங்கிறாள். இதையடுத்து, நான் உங்களுக்கு சூப்பராக விருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன்.நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரை சுற்றி வார்த்துவிட்டு வாங்க என்று சொல்ல இருவரும் காரில் கிளம்புகின்றனர்.
கார்த்திகை தீபம்: போகும் வழியில் மாங்காய் மாங்காய் தோட்டத்தை பார்த்து மாங்காய் சாப்பிட வேண்டுமென ஆசைப்படுகிறாள். கார்த்திக் தோட்டத்து காரரிடம் பேசி வாங்கி தருவதாக சொல்ல ரேவதி திருட்டு மாங்காய் தான் ருசியா இருக்கும் என்று சொல்கிறாள். இதனால் கார்த்தியும் ரேவதியும் தோட்டத்துக்குள் புகுந்து கல் எடுத்து அடிக்க அந்த கல் யாரோ ஒருவர் தலையில் விழுந்து அவர் இவர்களை துரத்த இருவரும் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். பிறகு இருவரும் சேர்ந்து கம்மாய்க்கு வருகின்றனர். தனித்தனியாக மீன் பிடிக்கின்றனர், ஆனால் யாருக்கும் மீன் கிடைக்காததால் பிறகு இருவரும் சேர்ந்து புடவை முந்தானையில் மீன் பிடிக்க முயற்சிக்க மீனும் கிடைக்கிறது, பிறகு இதை சுட்டு சாப்பிடுகின்றனர். ரேவதி குழந்தைப்போல விளையாடுவதைப் பார்த்த கார்த்திக், நீ இப்பளவு ஜாலியா இருக்க ஆனால், வீட்டில் ஏன் இப்படி இருக்க என்று கேட்க, எல்லாம் எங்க அம்மாவால் தான் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











