சாமுண்டீஸ்வரிக்குக் கார்த்திக் விட்ட அதிரடி சவால்..ஹனிமூன் டிக்கெட்டால் ரேவதிக்கு வந்த சந்தேகம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு எனக்கு என்னமோ அந்த பொண்ணு சொல்றது உண்மை என்பது போல தான் தோன்றுவதாக சந்தேகம் கொள்கிறாள். இதையடுத்து, ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம் சென்று உண்மையிலேயே எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்க, சாமுண்டீஸ்வரி அதெல்லாம் இல்ல ரேவதி, அப்படி உனக்கு கல்யாணம் ஆகி இருந்தா? என் கணவர் உன்கூடத்தானே இருந்து இருப்பார்... அவருக்குமா அக்சிடேன்ட் ஆச்சு, நீ மனசே போட்டு குழப்பிக்காதே என ரேவதியை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் சாமுண்டீஸ்வரி என்ன நடக்குது இங்க என்று சந்திரகலாவிடம் விசாரிக்க, நான் தான் அக்கா, அந்த டிரைவரிடம் இருந்து ரேவதியை காப்பாற்ற இப்படி ஒரு பொய்யை டாக்டரிடம் சொல்ல சொன்னதாக சொல்கிறாள். ராதிகா வீட்டிற்கு வந்து சொன்ன விஷயத்தை மயில்வாகனம் கார்த்தியிடம் சொல்ல, இது உண்மை தானா என்பதை தெரிந்து கொள்ள கார்த்திக் டாக்டர் வீட்டிற்கு சொல்ல, அங்கு ராதிகாவை டாக்டர் அறையில் பூட்டி வைத்து இருக்கிறாள். அதைத்தொடர்ந்து, ராதிகா கார்த்தியிடம் அனைத்துவிஷயத்தையும் சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைந்கிறான்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் கார்த்திக், சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி சந்தித்து பேச சாமுண்டீஸ்வரி உன்கிட்ட இருந்து என் பொண்ண பிரிக்கத்தான் இப்படி பண்ணேன் என சொல்ல, இதனால் கோவப்படும் கார்த்திக், இது ரொம்ப தப்பு என்கிறான். மேலும் இதை எப்படி டீல் பண்ணனுமோ அப்படி பாத்துக்குறேன் என சவால் விடுகிறான். பின் கோவிலுக்கு வந்த கார்த்திக் ரேவதியுடன் பழைய நினைவுகளை நினைத்து பார்த்து பீல் செய்கிறான்.

ரேவதிக்கு வரும் சந்தேகம்: மறுபக்கம், ரேவதிக்கு ஒரு கொரியர் வர அதில் ஹனிமூன் டிக்கெட் இருப்பதை பார்த்து குழப்பம் அடைகிறாள். மீண்டும் பைக் வாங்கியதற்காக பரிசாக இந்த ஹனிமூன் டிக்கெட் கிடைத்திருப்பதாக தெரியவர அவளது குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. இதனால், ரேவதி ஷோரூமுக்கு போன் செய்து, நான் பைக் வாங்கவில்லை என சொல்கிறாள். அங்கு இருக்கும் பெண் மேடம் எங்க ஆபிசில் புல்லட் பைக் புக் செய்தவர்களுக்குத்தான் இந்த ஹனிமூன் டிக்கெட்டை அனுப்புவார்கள் என்று சொல்கிறார். மேலும் உங்க பெயர், முகவரி சொல்லுங்க என அந்த பெண் செக் செய்து பார்த்துவிட்டு, மேடம் உங்க பெயரில் தான் பைக் புக்காகி இருக்கு,நீங்கதான் பைக் வாங்கனீங்க என்று சொல்ல, இது எப்போ நடந்தது என்ற சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications