மாமனை வச்சு என்கிட்ட டீல் பேசுறீங்களா? கார்த்திக்கு சாமுண்டீஸ்வரியின் விதித்த கொடூர நிபந்தனை!

சென்னை: கார்த்திகை தீபம் எபிசோடில், காரில் இருந்த பர்சில் ரேவதி, கார்த்தியின் திருமண போட்டோ இருக்க கார்த்தி மாமா தான் தன்னுடைய கணவர் என்ற என்கிற உண்மை ரேவதிக்கு தெரிய வருகிறது. ரேவதி கண்ணீருடன் இருக்க கார்த்திக் என்ன ஆச்சு என்று கேட்க ரேவதி கண்ணீரை துடைத்துக் கொண்டு சமாளிக்கிறாள். ரேவதி கார்த்தியிடம் எதுக்கு மாமா என்கிட்ட உண்மையை மறைச்சீங்க என்று கேட்க ரேவதி வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கார்த்திக் போட்டு உடைக்கிறான்.

கார்த்திகை தீபம்: இதுதான் நான் உன் கழுத்தில் கட்டிய தாலி, இந்த தாலியை நான் மறுபடியும் உன் கழுத்தில் அத்தையின் சம்பதத்தோடு தான் கட்டுவேன். ஆனால்,கல்யாணம் ஆன உண்மை தெரிந்ததை வெளியில காட்டிக்க வேண்டாம், சண்டை போட்டுக் கொள்வது போல் நடிக்கலாம் என திட்டமிடுகின்றனர். வீட்டுக்கு வந்த ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அதுவும் கார்த்தி மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், அவரை நான் மனசார விரும்புகிறேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் ரேவதியை சமாளிக்க முடியாத சாமுண்டீஸ்வரி, சரி உனக்கு அதுதான் விருப்பம்னா கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறாள். இதைக்கேட்டு சந்திரகலா ஷாக் ஆகிறாள். அதற்காக எதிர்ப்பு தெரிவிக்காமல் சாமுண்டீஸ்வரி நீ கட்டிக்கோ என சொல்கிறாள் என தெரியாமல் குழப்பம் அடைகிறாள்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

சாமுண்டீஸ்வரியின் பிளான்: மறுபக்கம்,சாமுண்டீஸ்வரி கார்த்திக்கிற்கு ஃபோன் செய்து ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்ல, கார்த்திக், சாமுண்டீஸ்வரி சொன்ன இடத்திற்கு வருகிறார். அப்போது சாமுண்டீஸ்வரி, எப்படியோ என் மகள் ரேவதியோட மனசை மாத்தி அவளை காதலிக்க வெச்சிட்ட, இப்போ அவ, உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று அடம் பிடிக்கிறாள், நானும் உன் இஷ்டப்பட கல்யாணம் பண்ணிவைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக், நல்ல விஷயம் தானே அத்தை, ரேவதிக்கு பழைய விஷயம் எல்லாம் மறந்து இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக அவளுக்கு என்னை பிடிச்சி இருப்பது நல்ல விஷயம் தானே என்று சொல்கிறார்.

பொய் சொல்லணும்: இதைக்கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, போதும் நிறுத்து உன்கிட்ட இப்போ நான் சம்மந்தம் பேச வரல, இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலசபூஜையில் உங்க மாமா கலந்து கொள்ள வேண்டும்னு கேட்டல, உன் ஆசைப்படியும், இந்த ஊர் மக்கள் ஆசைப்படியும் உன் மாமா இந்த கலசபூஜையில் கலந்து கொள்வார். அதற்கு பதிலா நீ ஒரு விஷயம் எனக்கு செய்யணும் அப்படி நீ எனக்கு உதவி செய்தா உன் மாமா கலசபூஜையில் கலந்து கொள்வார் என்று சொல்கிறார். இதைக்கேட்ட கார்த்திக் என்ன அத்தை, மாமா வெச்சி என்கிட்ட டீல் பேசுறீங்களா... என்று கேட்கிறார். ஆமாம் அப்படியே வெச்சிக்கோ, நீ ரேவதிகிட்ட உன்னை நான் லவ் பண்ணல, உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைக்கவில்லை என்று சொல்ல வேண்டும் என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X